பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பாரதி தமிழ் உலவி அத்துடன் யோகப்படுவதால் சக்தியுண்டாகிறது. சரீரத்தை உழைப்புக்கு உட்படுத்துவதால் இடைவெளியெங்கும் ததும்பிக் கிடக்கும் சக்தி அதனுள்ளே குடிகொள்ளுகிறது. அறிவைப் பல விஷயங்களிலே சிரத்தையுடன் செலுத்தி உழைப்ப தல்ை சக்தியுண்டாகிறது. இங்ங்னம் சிறிது சிறிது ஏற்படும் சக்தியினலேயேதான் உலகத்தில் மனிதர்கள் ஜீவித்திருக்கிருர்க்ள். தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறை வேற்றும் பொருட்டாகவே நாம் உயிர் தரிக்கின்ருேம். மாதா இந்த காட்டு ஜனங்களுக்குச் சக்தி யதிகரிக்கும்படி செய்க ; அக் காரியத்தை கிறைவேற்றுவதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும். ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை, மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம், தவம், பிரம்மசரியம், சுத்தம் முதலியவற்ருல் ஒர் ஜாதிக்கு சக்தி அதிகப்படுகிறது. மனம், வாக்கு, செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும், புறமும் மாசில்லாது செய்யப் பழகவேண்டும். பயம், ஸ்க்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதல்ை சக்தி யேற்படும். புராதன லம்பிரதாய மென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாய் விட மாட்டாது; புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யா கக் கொண்டு விடுதலும் பிழை. ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தே தான், ஒரு விஷயத்தின் மெய்ம்மையும், பொய்ம் மையும் விளங்கும். நமது முன்னேர்கள் ' யோகம்' என்றதோர் மார்க்கம் ஏற்படுத்தியிருக்கிருர்கள். இஃது ஹடயோகம், ராஜ யோகம், பக்தியோகம், ஞானயோகம் என நான்கு வகைப்படும். இவற்றில் ஹடயோகந்தான் மிகக் குறைந்த பயன் தரக்கூடியது; மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம். விஷயம் தெரியு முன்பாகவே, இதில் பயனென்ன விளையப்போகிறது என்று சந்தேகப்படுதல் தெளிந்தோர் செய்யும் காரியமன்று. அவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அங்ங்னம் சாதனை செய்த வர்களுக்கு பலவித அபூர்வ சக்திகளுண்டா யிருப்பதைக் கண்ணுரக் காண்கிருேம். கமக்கும் ஏன் இந்த சக்திகள் ஏற்படக்