பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி 137 கர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதையில்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லே விட்டுப் போய்விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும். கோவிலுக்குப் போனலும் சரி ; போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி ; கும்பிடாவிட்டாலும் சரி : பிறரை ஏமாற்றுவதை கிறுத்தினால், தெய்வம் அருள் புரியும், துளிகூட, ஒரு அணுக் கூட, மற்றவர்களே ஏமாற்றுவதே கிடை யாதென்று ஒருவன் பரிபூரண சக்தி அடைவானகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு, ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனே பண்ணக்கூடாது. வஞ்சனேயில்லாமல் ' ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி ' என்று ஆற்றின்மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ங்னம் முற்றிலும் பராதீனளுய் எவன் ஈசுவரன்மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு கடக்கிருனே, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸந்தேஹமே கிடையாது. பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அகியாயம் செய் கிருேனே அதுவரை கலியுகம் இருக்கும். அகியாயம் நீங்கினம் கலியில்லை; உலகம் முழுவதும் கலியில்லை. “உலகம் முழுவதும் அகியாயத்தைவிட்டு சமீப காலத்தில் நீங்குமென்று கினைக்க ஏதுவில்லை யாதலால் கிருதயுகம் வரப்போவதில்லை. நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும் ?” என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் கடக்கும் அகியாய வழியிலே தொடர்ந்து செல்லக்கூடாது. எவன் அகியாயத்தை விடுகிருனே, அவனுக்குக் கிருதயுகம் அந்த rணமே கைமேலே கிடைக்கும். இதில் ஸந்தே ஹமில்லை. ஒருவன் கலியை உடைத்து கொருக்கில்ை, அவனைப் பார்த்துப் பத்துப்பேர் உடனே கொருக்கி விடுவார்கள். இங்ங்ணம், ஒன்று. பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக; மனித ஜாதியில் ஸத்ய யுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹமில்லை.