பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) xvii அங்கே கிடைத்தன. 1910 ஏப்ரல் மாதத்தில் பூரீ அரவிந்த கோஷ் புதுச்சேரி வந்தடைந்தார். அவருக்குச் சற்று முன்பே புரீ. வ. வே. சு. ஐயர் அவர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தார் . லண்டன் நகரத்தில் இந்திய விடுதியிலிருந்த ஓர் இளைஞர் 1909 ஜூலை 1-ம் தேதி கர்சான் வில்லி என்ற ஆங்கிலேயனைச் சுட்டு வீழ்த்தினன்; தானும் சுட்டுக்கொண்டு உயிர்துறந்தான். உடனே இந்திய விடுதியிலிருந்த சவர்க்கார், வ. வே. சு. ஐயர் முதலியோ ரைக் கைது செய்ய முயன்ருர்கள். சவர்க்கார் பிடிபட்டார். ஆனல் ஐயர் மாறுவேடம் பூண்டு தந்திரமாகப் புதுச்சேரி வந்தடைந்தார். பூரீ அரவிந்தர். நீ ஐயர் இவர்களுடைய கூட்டுறவு பாரதி யாருக்குக் கிடைத்தது. பாரதியாருக்கு இளமையிலிருந்தே பராசக்தியிடம் நிறைந்த பக்தி உண்டு. பராசக்தியின்மேல் பல அற்புதமான பாடல்கள் பாடினர். கண்ணனும் முருகனும் இவர் உள்ளத்தைக் கவர்ந்த இரண்டு முக்கிய தெய்வங்களாகும். கண்ணன் பாட்டு, தமிழ் இலக்கியத்திலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகனைப்பற்றி இவர் எழுதிய பாடல்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. " சுற்றி கில்லாதே போ-பகையே துள்ளி வருகுது வேல் ” என்ற வரிகளை அட்சர லட்சம் பெறும் என்று வ. வே. சு. ஐயர் புகழ்ந்துள்ளார். முதல் உலக யுத்தம் 1918 நவம்பரில் முடிவுற்றது. பாரதியார் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டு பிரிட்டிஷ்-இந்தியாவிற்குள் நுழைந்தார். உடனே இவரைக் கைது செய்து சிறையிலிட்டனர். ஆனல் நண்பர்களின் உதவியால் விரைவில் இவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு இவர் கடையத்திற்குச் சென்று சில காலம் வாழ்ந்தார். பிறகு அங்கிருந்து சென்னேக்கு வந்து மீண்டும் சுதேசமித்திரனில் பணியாற்றத் தொடங்கினர். அதற்கு முன்பே பாரதியாரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்து விட்டது. அவர் ஒரு புது மனிதராகக் காணப்பட்டார். சுதேசமித்திரனில் 1930 நவம்பர் 15-ம் தேதியிலிருந்து தொடர்ந்து அநேகமாக நாள்தோறும் குறிப்பு, ரசத்திரட்டு, விைேதத்திரட்டு என்பவை போன்ற தலைப்புக்களுள்ள கட்டுரை களை பாரதியார் எழுதத் தொடங்கினர். அந்தக் கட்டுரைகள் தாய்நாட்டு விடுதலைக்கு ஆர்வம் ஊட்டக் கூடியனவாகப் பெரும் பாலும் இருந்தன. 14