பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள துாரம் 163 அடைத்து வைத்துக் கொண்டிருக்கிருர்கள். அக்கொள்கைகளை விற்றும் pவிக்கிருர்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப் போதிக்கிருர்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து, இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் மனமே மனம், இம் மஹான்கள் அவதார புருஷர்களே என்று தம்மைப் போற்றும் பொழுது அப் பூஜிதையையும் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து வெறியடைகிருர்கள். ஆனால் அவர்களைப்பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானல், அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்ம்ஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. "தட்டிச் சொல்ல ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண் டம்' என்றபடி பேசிவிட்டு, ஆபத்து வந்த காலத்தில் கான் சொன்னபடி நீங்கள் செய்ய வேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்ய்ப்படாது என்று ஜனங்களை ஏமாற்றுகிருர்கள். அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளே ஜால வித்தைக் காரனை போல் மாற்றிவிடுகிருர்கள். இம் மஹா பாதகர்களால் கம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிருர்கள். நமக்கு கொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் கல்ல தோர் கொள்கையை விட்டு விட்டு விலகி நடப்பானைல், அப்பொழுதும் நாம் அவனேக் கொண்டாடுவது மதியினம். அவனே எவ்வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காப்பிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காக வும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடு வானல்ை, அவனே மானிட ரால் எந்த வகுப்பில் சேர்க்கலாம் ? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது. அவன் சம்பந்தப்பட்ட மட்டில், கொள்கைக்கும் செய்கைக்கும் வெகு தாரம் உண்டு.