பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத ரிஷிகளின் கவிதை 187 வீண் பெருமை கொள்வோரின் பேச்சை காம் உதறிவிடுதல் நியாயம். ஆல்ை, வஸ பண்டிதர் சொல்லியதை நாம் மதிப்பு டன் ஏற்றுக்கொள்ளுதல் தகும். இடைக் காலத்திலே நமது ஜாதி பொய்களும் சோர்வுகளும் குவித்த குப்பையின் கீழே. அழுந்திக் கிடந்தது. பாரத மாதா கித்திரையிலிருந்தாள். இப் போது, மறுபடியும் அந்தக் குப்பையிலிருந்து வெளிப்பட்டு, தைரியமென்னும் கங்கா நதியில் ஸ்நானம் செய்துவிட்டு, நமது பாரத ஜாதி தனது வானத்திலே தோன்றும் ஸஅர்யோதயத்தை அன்புடன் அழைத்து வாழ்த்துக் கூறுகின்றது. மரணமில்லாத இந்த ஹிந்து நாகரிகமாகிய கற்பக விருகூடி த் துக்கு ஆதியிலே விதையூன்றியவர்கள் வேதரிஷிகள். அவர்கள் எக்காலத்திலே எத்தனை நூற்ருண்டுகளின் முன்னே-இருந்தார் களென்பதைக் கணக்கிட்டுச் சொல்ல, நவீன ஆராய்ச்சி யாதொரு. கருவியு மில்லாதிருக்கிறது. ஹிமவத் பர்வதம் எப்போதுண்டா யிற்று ? யாருக்குத் தெரியும் ? வேத ரிஷிகள் எக் காலத்தில் வாழ்ந்தவர் ? எப்படிச் சொல்வது ? பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிருர்:ங்ேகள் பிரார்த்தனை செய்யும்போது அது உள்ளத்தின் அடி யிலிருந்து வெளிப்பட வேண்டும். பிறகு சிறிது காலம் காத்துக் கொண்டிருந்தால், எ ன து தாயாகிய ஜகதம்பிகை உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுப்பாள்.' கன்று சொல்லினர் ராமகிருஷ்ண முனி. உள்ளத்தின் அடியி லிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு மந்திரம்' எ ன் று பெயர். அது பலிக்கும். ஆ ைல், அங்கிருந்து பிரார்த்தனே கொண்டுவருதல் எளிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின் அடி ! கடலடியை மானுடர் அ ள ந் து பார்த்திருக்கிருர்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனிலும் பல மடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்வு பெறவேண்டா. ஒவ்வொருவனும் உள்ளக் கடலில் இயன்றவரை மூழ்கி அங்கிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனே ஆழத்திலே போகிருயோ, அத்தனைக் கத்தனே கல்லமுத்துக் கிடைக்கும். ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்துகொண்டோர். ஆதலால், அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரங் கொண்டு.