பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாரதி தமிழ் வேணு முதலிக்குக் கீழே விழுந்த கோவு பொறுக்க முடிய வில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டுச் சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கிவிட்டது. வேணு முதலி சொல்லுகிருன் :"ஒய் சாமியாரே, நீர் பழைய காலத்து மனுஷ்யன், உம்முடன் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய ஸாமர்த்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரண்டு பாஷைகளிலே தேர்ச்சி யுடையவன். உமக்குத் தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகி றேன். நீர் தெருவிலே பிச்சை வாங்கித் தின்று திண்ணை தூங்கு கிற பேர்வழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்துக்காகப் பாடுபடுவதாக ஹம்பக் பண்ணிக் கொண்டிருக்கிற காளிதாஸர் -இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப்பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும் !" என்று வேணு முதலி இலக் கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினன். மறுபடி சாமியார் : சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே இம்மாயா யோகம் இனி ஏனடா-தம்மறிவின் சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம கிஷ்டா சிறு பிள்ளாய் .ே' என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினர். அப்போது வேணு முதலி என்னை நோக்கி ' ஏனையா 1 காளி தாஸ்ரே, இந்தச் சாமியார் உமக்கு எத்தனே நாட் பழக்கம் ?” என்று கேட்டான். நான் ஜவாப் சொல்லாமல் ' சும்மா ' இருந்து விட்டேன். அப்பொழுது குள்ளச் சாமியார் சொல்லத் தொடங்கினர் : அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடி யும். காலேந்து பாகம் ஆலுைம் ஆகக்கூடும்.