பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அர்ஜுன சந்தேகம் ஹஸ்தினபுரத்தில் துரோனுசாரியரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோததிைகளும் படித்து வருகையில், ஒருநாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக் கொண்டு வரும்போது, அர்ஜூனன் கர்ணனைப் பார்த்து :" ஏ. கர்ணு, சண்டை நல்லதா ? சமாதானம் கல்லதா?' என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு உபகதை ; சாஸ்திர ப்ரமாணமுடையது ; வெறும் கற்பனையன்று.) "ஸமாதானம் நல்லது" என்ருன் கர்ணன். " காரணமென்ன ? ' என்று கிரீடி கேட்டான். கர்ணன் சொல்லுகிருன்: "அடே, அர்ஜூன, சண்டை வந்தால் கான் உன்னே அடிப்பேன். அது உனக்குக் கஷ்டம். கானே இரக்கச் சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த் தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது” என்ருன். அர்ஜுனன்: ' அடே கர்ணு, கம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா ? என்று கேட்டேன்' என்ருன். அதற்குக் கர்ணன்: 'பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை ' என்ருன். இந்தப் பயலைக் கொன்றுபோடவேண்டும் என்று அர்ஜுனன் தன் மனத்துக்குள்ளே தீர்மானம் செய்துகொண்டான். பிறகு அர்ஜுனன் துரோணுசாரியாரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான். " சண்டை நல்லது ' என்று துரோணுசாரியார் சொன்னர். * எதனலே ' என்று பார்த்தன் கேட்டான். அப்போது துரோணுசாரியார் சொல்லுகிருர் : "அடே விஜயா சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும், இல்லா விட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் y