பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாரதி தமிழ் பின்னே ஒரு வேப்பஞ்சோலே. அங்குப் பல மூலிகைகளிருக் கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி உண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னர். அது கொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் கா, கா என்று உபதேசம் புரிகின்றன. வான வெளியிலே ஒலி கர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணி யின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று. ' உங்கப்பா பெயரென்ன?’ என்று பாட்டி காந்தா மணியிடம் கேட்டாள். ' எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கார் ' என்று காந்தாமணி புல்லாங் குழலைப் போல் ஊதிச் சொன்னாள். கிழவி, போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தாள். போலீஸ் பார்த்தசாரதி அய்யங்கார் கையும் காலும் வெலவெலத்துப் போனர். அவருக்கு முகமும், தலையும் வெள்ளே வெளேரென்று கரைத்துப் போய்த் தொண்ணுாறு வயதுக் கிழவனைப் போலே தோன்றிலுைம் உடம்பு நல்ல கட்டுமஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சியுடையவரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்படமாட்டேனென்று அவரே என் னிடம் பத்துப் பதினேந்து தரம் சொல்லியிருக்கிருர். அடிப்பட்ட குராதி குரளுகிய பார்த்தசாரதி அய்யங்கார் கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ங்னம் கை கால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி கின்றதைக் கண்டு வியப்புற்றேன். அப்பால் அந்தப் பாட்டி காக்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைச் சுட்டிக் காட்டி-இதோ கிற்கிருரே, இக் தப் பிராமணன், இவரா உங்கப்பா ?' என்று கேட்டாள். அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளையும் வானத் திலே போட்டு, முகத்திலே வானெளியை நகைக்கத் தக்க ஒளி யுடைய நகை வீச : “ ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னெங்கரே லென்று ஆசாரியைப் போலிருக்கிருரே! எங்கப்பா செக்கச்