பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 பின்பு ஒரு நாள், புதுவைக் காமாட்சியம்மன் கோயில் தெருவில் இருந்த பழமலை என்னும் என் உறவினருடன் சென்று பாரதிதாசனைப் பார்த்துவிட்டு வந்தேன். இதன் பிறகு நீண்ட பசிபிக் இடைவெளிக்குப் பின்னரே கவிஞ ருடைய தொடர்பு ஏற்பட்டது. 1940 ஆம் ஆண்டு என் பதினெட்டாம் அகவையின் இறுதியில் படிப்பு முடித்து வித்துவான் பட்டம் பெற்றோ. அடுத்த சில திங்களில் - சூலைத் திங்கள் முதல் நாளன்று மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளர் பதவியில் அமர்ந்து யான் பணியாற்றிக்கொண் டிருந்தேன். 1942 ஆம் ஆண்டுக் கோடை விடுமுறையில் யான் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது, பாரதிதாசனோடு ஒரு நேர்காணல் (சந்திப்பு) நிகழ்ந்தது. அந்த விடுமுறைக் காலத்தில், புதுச்சேரியில் நன்( செயல்பட்டு வந்த இளைஞர் கழகம் (Young Men Association) என்னும் நிறுவனம், சென்னையில் பேராசிரி ராகப் பணி புரிந்த முத்து இராசாக் கண்ணனார் அவ. களைப் புதுச்சேரிக்கு அழைத்து வந்து தங்கச் செய்து பெரிய புராணம் பற்றித் தொடர் சொற்பொழிவு நிகழ்த், ஏற்பாடு செய்திருந்தது. நல்ல கூட்டம் - இராசாக் கண்ை னார் சொல்வன்மை மிக்கவ ராதலின் மிகுந்த புகழ் பெற்றார். ஆனால், பாரதிதாசன் சுயமரியாதை இய கத்தைச் சேர்ந்திருந்ததால், பெரிய புராணச் சொ பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த இராசாக் கண்ணனாை வெறுத்தார். அந்தச் சொற்பொழிவிற்கு நாடோறு சென்று கொண்டிருந்த என்னையும் அவருக்குப் பிடிக் வில்லை போலும்! -