பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100 நான் மன்னர் மன்னனை நோக்கி, இந்நேரத்தில் குடும்பத்தோடு திண்டிவனத்தில் வந்து ஏறியதற்கு உரிய காரணம் என்ன என்று வினவினேன். அதற்கு அவர் கூறிய விளக்கமாவது:- "சென்னையில் அப்பாவுக்குக்(கவிஞ ருக்குக்) கடுமையான மார்புவலி மாலையில் ஏற்பட்டதாக வும் சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும் எனக்குத் தொலைபேசி வாயிலாகச் செய்தி தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியிலிருந்து புறப்படும் புகைவண்டி அப்போது புறப்பட்டு விட்டதால், வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு திண்டிவனத்தில் வந்து வண்டி யைப் பிடித்தோம் என்று அவர் கூறினார். மனக் கலக் கத்தோடு அனைவரும் பயணம் செய்து மறுநாள் விடியற் காலை சென்னை அடைந்தோம். அன்று காலையே, உல கத்தில் ஈடு இணையற்ற பாவேந்தர் பாரதிதாசனார் இவ்வுலகை விட்டுப் பிரியா விடைபெற்றுச் சென்று விட் டார். அவர் பிரியவில்லை; அவர்தம் பாடல்களின் வாயி லாக அவர் இன்றும் நம்முடனே உள்ளார்; இனியும் என்றும் இருப்பார். வாழ்க கவிஞரின் புகழ்! எனது தலைமையில்: பாவேந்தர் இயற்கை எய்திய பிறகு ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. ஒராண்டு(ஆண்டு நினைவில்லை) எனது (சு.ச.) தலைமையில் பாவேந்தர் விழா நடைபெற்றது. விழாவில் பலவகையான நிகழ்ச்சிகள் பங்கு கொண்டன. அறிஞர் சிலர் சொற்பொழிவாற்றினர். சொற்பொழிவாளர்களுள் பாவேந்தரின் மகன் மன்னர் மன்னனும் ஒருவராவார். மன்னர் மன்னன் தமது சொற் பொழிவில் கூறியனவற்றுள் ஒரு கருத்து வருமாறு: