பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101 என் தந்தையாரைப்பற்றி யாரும் எளிமையாகப் பேசக் கூடாது. பாரதிதாசன் அதோ அங்கே உட்கார்ந்திருந் தார்-இதோ இங்கே உட்கார்ந்திருந்தார்-அங்கே அவ ரோடு பேசினேன்-இங்கே அவரோடு உரையாடினேன்-என் றெல்லாம் யாரும் தம் பெருமைக்காகக் கண்டபடி என் தந் தையாரின் பெயரை எளிமையாகப் பயன்படுத்தக் கூடாதுஎன்ற கருத்துப்பட மன்னர் மன்னன் பேசினார். இறுதியில் யான் நிறைவுரை கூறுகையில், பாவேந்தர் பற்றிய பல செய்திகளை அறிவித்த பின்னர், மன்னர் மன்னன் கூறிய தாக மேலே குறிப்பிடப்பட்ட கருத்து பற்றியும் என் கருத் தைச் சொன்னேன். அதாவது: பாவேந்தரைப் பற்றிக் கண்டபடி எளிமையாகப் பேசத் கூடாது-அவர் பெயரை அளவோடு பயன்படுத்த வேண் டும்-என்னும் கருத்துப்பட மன்னன் மன்னர் பேசினார். பாவேந்தரைப் பழித்தும் குறைத்தும் மட்டப் படுத்தியும் பேசக் கூடாதே தவிர, மற்றபடி, அவரைப் பற்றி உயர் வாக யார் வேண்டுமானாலும் பேசலாம்-எங்கே வேண்டு மானாலும் பேசலாம் - அவரைக் குறைவு படுத்தாமல், எவ் வளவு எளிய(சாதாரணமான)செய்தியானாலும் பேசலாம். அவரைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருந்தால்தான் அவர் நினைவு நாட்டில் மறக்கடிக்கப் படாமல் இருக்கும்அவரும் மறைக்கப்படாமல் இருப்பார். . ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், பாரதிதாசரை விட மிகப் பெரியவர் ஒருவர் மறைக்கப்பட்டிருந் தார். இப்போதுதான் நாம் அவரை வெளிக்கொணர்ந்து விளம்பரப் படுத்திக்கொண்டு இருக்கிறோம். நாம் இந்த அளவுக்கு முயற்சி எடுத்திராவிட்டால் அவர் முற்றிலும் மறைக்கப்பட்டிருப்பார். இப்போது ஒரு சிலராவது நம்