பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116 4. சங்கநாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தாரீர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் - உடுக்க ளோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்-ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் - - - முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராத தீரர் என்று ஊதுது சங்கே! - பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் - ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய் கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் - எங்கள் மூச்சாம் 5. இன்பத் தமிழ் தமிழுக்கும் அமிழ்தென்று பேர்-அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!