பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 தேநீர் அருந்திச் செல்லலாம் வா-என்று கூறி அழைத்துச் சென்றாராம். தேரு ஒரக் கடையைத் தேடிச் செல்வதை யாரும் கண்டு அறியாதிருப்பதற்காக, மேல் துணியைத் தலையிலே கட்டிக் கொண் டும் கீழே தொங்கும் வேட்டியை முழங் காலுக்கு மேலே மடித்துக் கட்டிக் கொண்டும் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம் கவிஞர். வழியில் சிலர் எப்படியோ கவிஞரை அடையாளம் கண்டு கொண்டு, புரட்சிக் கவிஞர்-புரட்சிக் கவிஞர் என்று கூறிச் சூழ்ந்து கொண்டனராம். அப்போது கவிஞர் அவர்களை நோக்கி, ‘என்னங்கய்யா! நான் உண்ணுவதற் காக ஒரு நல்ல ஒட்டலைத் தேடிக்கொண்டு செல்கிறேன்பசிவேளையில் நீங்கள் வந்து சூழ்ந்து கொண்டீர்களேஎன்று கூறினாராம். உடனே அவர்கள், ஒருவரோ டொரு வர் போட்டி போட்டுக் கொண்டு, எங்களுடன் வாருங்கள் என்று கூறிக் கவிஞரையும் உதவியாளரையும் ஒரு நல்ல உணவுக்கடைக்கு அழைத்துச் சென்று உண்ணச் செய்து அனுப்பி வைத்தார்களாம். திருச்சி சுலைமான் கவிஞர் திருச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக் குப் பணிவிடை புரியப் பலர் காத்திருப்பார்களாம். அவர் களுள் ஒருவர் சுலைமான் என்னும் முசுலீம் தோழராம். கவிஞர் வந்தது தெரிந்து விடின், சுலைமான் ஒடோடிச் சென்று கவிஞர் திருச்சியை விட்டுப் புறப்படும் வரையும் அன்புடன் பணி விடைகள் செய்து கொண்டிருப்பாராம். ஒருநாள் சுலைமான் உட்படப் பலர் கவிஞரைச்