பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 சூழ்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தனராம். இவர் களுள் ஒருவர், ஏதோ பேச்சு வந்தபோது, செஞ்சி-தேசிங்கு மன்னன் தொடர்பான ஒர் ஐயத்திற்குக் கவிஞரிடம் விளக் கம் கேட்டாராம். அந்த விவரம் வருமாறு: வட இந்தியாவில் ஆண்ட முசுலீம் மன்னரின் ஆணை யின்படி, நிஜாம் என்னும் முசுலீம் மன்னர் ஐதராபாத்தில் இருந்துகொண்டு தென்னிந்தியாவை மேலாட்சி புரிந்தார். நிஜாமின் ஆணையின் படி, தமிழ் நாட்டு வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஆர்க்காட்டைத் தலை நகராகக் கொண்டு நவாப் மன்னர் ஒருவர் தமிழ் நாட்டில் மேலாட்சி புரிந்துவந்தார். ஆர்க்காட்டு நவாப் மரபினரான முகமது அலி என்பவர், வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் தமிழ் நாட்டை நாற்பதாண்டு காலம் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். நவாப் மன்னரின் ஆணைப்படி, தேசிங்கு மன்னனின் தந்தை சரூப்சிங் செஞ்சிப் பகுதியை ஆண்டார். தந்தையார் காலமான பிறகு, தேசிங்கு, ஆர்க்காட்டு நவாப்புக்குக் கப்பம் கட்ட மறுத்து விட்டான். தேசிங்கு இந்து மதத்தினன். கப்பம் கட்டாததால் ஆர்க்காட்டு நவாப் செஞ்சிமேல் படையெடுத்து வந்தார். தேசிங்கு மன்னன் எதிர்க்கத் தொடங்கினான். மன்னன்தேசிங்கின் நண்பனும் படைத் தலைவனுமான மகமத்கான் என்பவனுக்கு அப்போது திரு மண நிகழ்ச்சி வழுதாவூரில் நடைபெற்றுக் கொண்டிருந் தது. தேசிங்கு, நவாப் படையெடுத்து வந்திருப்பதை ஆட் களை அனுப்பி மகமத்கானுக்குத் தெரியப்படுத்தினான். திருமண மேடையில் அமர்ந்திருந்த மகமத்கான் என்னும் முசுலீம் படைத்தலைவன் உடனே புறப்பட்டுச் செஞ்சிக்கு வந்து நவாப் படையோடு கடுமையாகப் போரிட்டுத் தேசிங்கிற்கு வெற்றிதேடித் தந்தான். மகமத்கான் போர்க்