பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 குக் காத்துக்கொண்டிருந்தார். மூவருக்கும் பத்தணா வீதம் முப்பது அனாதந்து மூன்று கட்டணச் சீட்டு வாங்கிவிட் டேன். மீதி என்னிடம் இருந்தது இரண்டு அணா தான். இரண்டு அணா என்பது இப்போதைய பன்னிரண்டரைக் (12) காசு ஆகும். பேருந்து புறப்பட்டது; புதுவைக்கும் கடலூருக்கும் இடையே உள்ள ரெட்டி சாவடி என்னும் ஊரில் நின்றது. அப்போது, ரெட்டி சாவடியில் சுங்க ஆய்வு அலுவலகம் குஸ்டம்ஸ் சோதனை அலுவலகம்) இருந்தது. உரிமை பெறாத புதுச்சேரி மாநிலம் அப்போது இந்தியாவுக்கு அயல் நாடாகக் கருதப்பட்டதால், ரெட்டி சாவடி அலுவல கத்தில் அனைவரும் இறங்க வேண்டும்; அரசு அலுவலர் கள் உடைமைகளை ஆய்வு செய்த பின்னரே அப்பால் செல்ல வேண்டும். எங்கள் மூவரின் ஆய்வு முதலில் நடை பெற்றதால் நாங்கள் மூவரும் விரைவில் அப்புற எல்லைக் குச் சென்றுவிட்டோம். அங்கே ஒரு கொட்டகை தெரிந் தது. அங்கே போய் உட்காரலாம் என்று கவிஞர் எங்களை அழைத்துச் சென்றார். உள்ளே நுழைத்ததும் அது ஒருசிற் றுண்டிக் கடை என்பது தெரிய வந்தது. கவிஞர் அமர்ந்து கொண்டு பரிமாறுபவரை நோக்கிப் பஜ்ஜி கொண்டுவா என்று சொன்னார். அவ்வளவுதான்! என் கையில் இருப்பதோ இரண்டு அணா தான். நான் திருநாவுக்கரசுக்குக் கைசைகை காட்டி வெளியே அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். கவிஞர் சிற்றுண்டி உட்கொண்டு காசு கொடுத்துவிட்டு வெளியே வந்தார். நான் திருடன் போல் விழித்த படியே அவர் அரு கில் போய் நின்றேன். எல்லா ஆய்வுகளும் முடிந்த பின்பு பேருந்து புறப்பட்டது. கடலூர்ப் பேருந்து நிலையம்போய்ச் சேர்ந்தோம்,