பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 பதவியை விட்டுப் புதுவைக்கு வந்து நிலையாய்த் தங்கி விட்டேன். அப்போது தொடக்கத்தில் சில திங்கள் காலம் கவிஞரின் வீட்டில் நீண்ட நேரம் தங்கி, குயில் இதழின் அச்சுப் பிழை திருத்துவது உண்டு. ஒருநாள் கவிஞர் என்னைநோக்கி, தம் மகன் கோபதிக் குத் (மன்னர் மன்னனுக்குத்) தமிழ் இலக்கியப் பாடம் கற்றுக்கொடுக்கச் சொன்னார். ஒத்துக்கொண்ட நான், முதலில் எந்த நூலைத் தொடங்கலாம் என்று வினவி னேன். திருவிளையாடல் புராணம் தொடங்கு என்றார். நான் சிறிது நேரம் கவிஞரை ஏறிட்டு நோக்கினேன். அதாவது, கவிஞர் சுயமரியாதைக் கொள்கையும் கடவுள் இல்லை என்னும் நாத்திகக் கொள்கையும் உடையவ ராயிற்றே! எப்படி திருவிளையாடல் புராணம் நடத்தச் சொல்கிறார்-என்ற வியப்புடன் ஏறிட்டு நோக்கினேன். எனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட கவிஞர், 'சண்முகம்! நீ நினைப்பது எனக்குப் புரிகிறது. இங்கே புராணத்தைப்பற்றி நமக்குக் கவலையில்லை; புராணத்தில் உள்ள தமிழே நமக்குத் தேவை. திருவிளையாடல் புரா ணம் எளிய நடையிலே கதைப் போக்காக இருப்பதால் முதலில்அதைக் கற்பித்து இலக்கியப் பயிற்சிஉண்டாக்கு வது நல்லது.-என்று கூறினார். நானும் அவ்வாறே அந்த நூலையே தொடங்கி நடத்தினேன். மலத்தில் கல் நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மயிலம் மலையில் வேறு பணி. யாற்றும் ஒருவருக்கும் எனக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது என்னிடம் மிகுந்த பேரருள் உடைய மயிலம் அடிகாள