பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 அரசு ஊழியத்தில் இருந்து கொண்டே வெளிப்படை யாக அரசியல் நடத்திய கவிஞரது போன்ற துணிவு எனக்கு இல்லை. நான் ஆசிரியர் பணி செய்து கொண் டிருக்கிறேன். பணியில் இருப்பவர்கள் அரசியலில் கலந்து கொள்ளக்கூடாது என்பது விதி. எனவே, யான் இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, யான் தலைமை தாங்க இயலாமையைப் பணிவுடன் தெரிவித்துக் கொண்டேன். இந்தச்செய்தி கவிஞரின் மகன் மன்னர் மன்னனுக்கும் தெரியும். எனக்கு எவ்வளவோ உதவி செய்த கவிஞருக்கு யான் இந்தச் சிறிய உதவியைக்கூடச் செய்ய முடியாமையை எண்ணிச் சொல்லொணாத் துயரம் எய்தினேன். தெ. பொ. மீ-க்கு மறுப்பு: புதுச்சேரியில் கல்விக் கழகம்’ என்னும் ஒரு கழகம் உள்ளது. அதன் இலக்கியப் பணிகள் அளப்பரியன. தேசி கப் பிள்ளை என்பவர் தலைவராகவும் திருநாவுக்கரசு என் பவர் செயலாளராகவும் இருந்து பெரும்பணி புரிந்துள்ள னர்; அந்தக் கழகத்தின் கழகப் புலவர்' என்னும் தகு தியை எனக்கு அளித்திருந்தனர். 1951 ஆம் ஆண்டு கல்விக் கழகத்தின் வெள்ளி விழா ஒரு வார காலம் பெருங் கூட்டத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவ்வெள்ளி விழாவில் “கல்விக் கழகக் கட்டுரைகள்’ என்னும் மிகப் பெரிய மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அச்சுப் பிழைதிருத்தி அதை வடிவமைத்தவன் கழகப் புலவனாகிய அடியேன்தான். அதில் அறிஞர்கள் பலரின் சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. அக்கட்டுரைகளுக்கிடையே பாவேந்தரின்