பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 இதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், உணர்ச்சிவயப் பட்டு எழுந்து மேடைமேல் பாய்ந்து ஏறி ஒலி பெருக்கி யைப் பிடித்துக் கொண்டு தெ.பொ.மீ.யை மறுத்துப் பேசத் தொடங்கிவிட்டேன். அதோடு தெ.பொ.மீ. முடித் துக் கொண்டார். கூட்டமும் அதோடு முடிந்துவிட்டது. அன்று மாலையில் தெ.பொ.மீ.யின் தலைமையில் நடந்த கூட்டத்தில் டாக்டர். மு.வரதராசனார் தெ.பொ.மீயை மறுத்துப் பேசினார்.கூட்டம் பரபரப்பாய் நடந்து முடிந் தது. கூடலூர்க் கூட்டம் கடலூர்ப் பகுதியைச் சேர்ந்த பழைய நகரம் கூட இார். தென்னார்க்காடு மாவட்டத்தில் கடற் கரையில் உள்ள கூடலூர் இது. இவ்வூரில் 1949 ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று கூறப்படும் சித்தி ரைத் திங்கள் முதல் நாளன்று மாலை ஒரு பொதுக் கூட் டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பாவேந் தர்; சொற்பொழிவாளன் நான். இதை முன் நின்று நடத் தியவர்கள், இப்போது விடுதலை நாளிதழின் ஆசிரியராக உள்ள கி. வீரமணியும், கூடலூர்ச் சாமிநானும் இன்ன சிலருமாவர். அப்போது வீரமணி ஒன்பதாம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சித்திரை முதல் நாள் பிற்பகல் கவிஞரும் நானும் புறப்பட்டோம். ஒரு கையிழுப்பு வண்டியில் புதுவைப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, வழியில் உள்ள ஒரு நிழலோ விய (Photo) நிறுவனத்தில் வண்டியை நிறுத்தி நிழலோ வியம் எடுத்துக்கொள்ள உள்ளே சென்றோம்.