பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 உரிமைபெறாத பிரஞ்சிந்தியாவிலிருந்து உரிமை பெற் றுள்ள இந்தியப் பகுதிக்குள் சென்றுவரப் பயண இசைவுச் சீட்டு (Pass-Port) எடுக்கவேண்டுமென இந்திய அரசு ஆணைபிறப்பித்திருந்தது. சீட்டில் நிழலோவியம் ஒட்ட வேண்டும். அதற்காக இருவரும் தனித்தனியாக நிழலோ வியம் எடுத்துக் கொண்டோம். பிறகு இருவரும் சேர்ந் தாற்போல் அமர்ந்து ஒன்று எடுத்துக் கொண்டோம். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிழலோவியத்தை யான் எங்கள் வீட்டில் தேடுகிறேன் - தேடுகிறேன்தேடிக் கொண்டேயிருக்கிறேன்-இன்னும் கிடைக்கவில்லை. இருவரும் கூடலூர் போய்ச் சேர்ந்தோம். கூட்டம் நடைபெற்றது. எனது பேச்சுக்குப் பின்பு பாவேந்தர் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார். இறுதியில் நன்றி சொல்ல வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவராகிய வீரமணி ஒருமணி நேரம் வெளுத்துக் கட்டிவிட்டார். 'விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது இதுதான் போலும்! கூட்டம் முடிந்ததும் இரவு விருந்து நடந்தது. புலால் உணவே மிகுதி. ஆட்டுக்கறி, மீன். இறால், முட்டை முத லிய உணவுப் பொருள்கள் இருந்தன. வட்டித்திருந்த இலை யில் அமரு முன்பு, கவிஞர் என்னை நோக்கி, சண்முகம்! உனக்குப் புலால் வருமா?’ என்று கேட்டார். நான் 'முட்டை வரும் என்றேன். உண்ணத் தொடங்கினோம்! மரக்கறியும் உண்டு. நான் கவிஞரைக் குறைத்துக் கூறுவதாக எவரும் எண்ணக் கூடாது. ஆங்கிலப் பேரறிஞர் ஜான்சனின் (Samuel Johnson) வரலாற்றை அவருடைய நண்பரும் வழக்கறிஞருமாகிய பாசுவெல் (Boswell) என்பவர் எழுதி