பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

7| பிறருக்கு அறிவுரை வழங்குவதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. கணேசா, காபி. ஒருநாள் கவிஞர் என்னிடம் பின்வரும் செய்தி ஒன் றைக் கூறினார். புதுச்சேரியில் கந்தசாமி பிள்ளை என் னும் பெரிய வணிகர் உள்ளார். புதுச்சேரியிலுள்ள கந்தன் டாக்கீசு அவருடையதுதான். திரையோவியம் த்ொடர் பாகக் கந்தசாமி பிள்ளையவர்கள் சென்னை சென்று வரு வார் போலும். கவிஞரும், கதை - வசனம்'- பாடல் எழு தித் தருவதால் திரையோவியம் தொடர்பாகச் சென்னை செல்வதுண்டு. - கவிஞர் சென்னையில் உள்ள திரையோவிய நிறுவனம் ஒன்றில் அமர்ந்திருந்த பொழுது, புதுவைக் கந்தசாமி பிள்ளை அங்குச் சென்றாராம் இவர் கவிஞரிடத்தில் படித்த மாணாக்கராம். இவரைக்கவிஞர் பார்த்ததும் பக் கத்தில் இருந்த ஒருவரைப்பார்த்து, என்மாணவன் வந்து விட்டான்; போய்க் காபி வாங்கிக் கொண்டு வா என்று அனுப்பினாராம். காபி வாங்கி வந்தவர்யார் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தானாம். சிவாஜி கணேசன் அப்போதுதான் திரை யுலகத்தில் புகுந்திருக்கிறார். கவிஞர் அவரைப் பார்த்துத்தான், 'கணேசா ! என் மாணவன் வந்து விட்டான்; போய்க் காபி வாங்கி வா என்று சொல்லியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியால், கவிஞர் தம்மாணாக்கர்களிடத்தில் செலுத்தும் அன்பின் செறிவை அறிந்து கொள்ளலாம். கவி