பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80 புரம் ஊர்க்காரர் ஒருவர் வந்திருந்தார். கவிஞர் சொற் பொழிவிற்காக அங்கே சென்றபோது பழக்கப்பட்டவரா யிருக்கலாம். நாங்கள் மூவரும் நான்கு மணிக்கே கடல் காற்று வாங்கப் புறப்பட்டுச் சென்று கடற்கரை மணலில் அமர்ந்தோம். இன்னும் பொழுது போனால் மக்கள் கூட் டம் நிரம்பிவிடும். அதனால் முன் கூட்டிச் சென்று முன் னால் வந்து விடலாம் என்பது கவிஞரின் திட்டமாயிருக் கலாம். எப்படியோ எவரும் வராத நான்கு மணிக்கே நாங்கள் சென்று உரையாடிக்கொண்டிருந்தோம். அப்ப்ோது இராசி புரத்தார் கவிஞரை நோக்கி, கடலைச் சுட்டிக் காட்டி, இவ்வளவு தண்ணீர் இருக் கிறதே! ஏன் வயலுக்குப் பாய்ச்சக் கூடாது? மழை இல்லை - தண்ணிர் இல்லை என்று புலம்புவதேன்? என்று கேட்டாரே! கவிஞரும் நானும் வாய்விட்டுச் சிரித்தோம். ஏன்சிரிக்கிறீர்கள்? நான் சொல்வது தவறா? என்று வேறு அவர் எங்களைக் கேட்டு வைத்தார். சேலம் மாவட்டம் தமிழகத்தின் உள் நாட்டுப் பகுதி, இங்குள்ள சிலர்க்குக் கடலைப் பற்றித் தெரியாது; கடல் நீர் கரிக்கும்-குடிக்க மட்டுமன்று - குளிக்கவும் உதவாது என்பன வெல்லாம் சிலருக்குப் புரியாது. அதனால் அவர் அவ்வாறு கேட்டுவிட்டார். அப்போது கவிஞர் இன்னொரு செய்தியை என்னிடம் கூறி வைத்தார். அதாவது: “சண்முகம்! இதைக்கேள். இவர் ஊர்ப் பக்கத்தார் ஒருவர் முன்பு ஒரு நாள் வந்தார். அவரையும் கடற் கரைக்கு அழைத்து வந்தேன். மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர் பின்வருமாறு கேட்டார்:"ஏன் ஐயா! இவ்வளவு நீளமான தண்ணீர்க் கரை (கடற்