பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 வந்தது. என்பான் யாரட்ா என்று தரக் குறைவாக எழுதியிருப்பது கவிஞருக்குப் பிடிக்கவில்லை போலும். ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப் பாட்டு என்பதுபோல, இப் பாடலுக்கு எதிர்ப்பாடல் பாடினார் கவிஞர். கவிஞரின் 'குயில் இதழில் எதிர்ப் பாடல் வெளிவந்தது;அது, 'இல்லை என்பான் நானடா-அந்தத் தில்லையைக் கண்டு தானடா என்று தொடங்கும் பாடலாகும். இப்பாடல் குயில் இதழில் அச்சடிக்கப்பட்ட போது, அச்சுப் பிழை திருத்திய வன் அடியேன். யாரடாஎன அடா புடா என்று எழுதியதினாலே நான் என்பாடலை எழுதினேன் என்றார் கவிஞர். - - - இதன்பின், சுத்தானந்த பாரதியாரின் பாடல் : 'இல்லை என்பார் யாரையா-என் அப்பனைத் தில்லையிலே சென்று பாரையா’ எனத் திருத்தம் செய்யப் பெற்று இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டது; இந்தத் திருத்தத்துடன் இப்போது பாடப் பெறுகிறது. - - கம்மிணாட்டி துரோணன் புதுவை மாநிலத்தில் உள்ள புராண சிங்கப்பாளையம் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்கு ஒரு முறை கவிஞரும் நானும் சென்றோம். வழக்கம் போல் கவிஞர் தலைவர்; யான் சொற்பொழிவாளன். கவிஞர் சொற்பொழிவாற்றியபோது, பாரத வரலாற்றில் இடம் பெற்றுள்ள துரோணரைப் பற்றிய பேச்சு எப்.