பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

91. எண்ணத்தால் அவனது கட்டை விரலைக் கேட்டு வாங்கிக் கொண்டான் கம்மிணாட்டி துரோணன்-என்று கவிஞர் சொற் பொழிவில் கூறினார். துரோணனைத் தரக்குறை வாய்க் கூறியிருப்பினும் சொன்ன கருத்து உண்மைதானே! புதுப் பெயர் வைப்பு: கவிஞர் பேரறிஞர் அண்ணாதுரை யவர்களைக் 'குள்ளர் எனவும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதன் அவர்களைப் புகையிலைக் கடைக்காரர் என்றும் இதுபோல் இன்னும் பிறரையும் சில சமயம் குறிப்பிடுவது வழககம. தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைக் கவிஞர் மீனாக்கிசுந்தரனார் என ஒரு பாடலில் குறிப்பிட் டிருந்தார். வெளியூர்ச் சொற்பொழிவு ஒன்றுக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கே உணவு கொண்டு கவிஞர் கை கழுவியதும், தெ.பொ. மீ. அவர்கள் தமது மேல் துண்டில் கையைத் துடைத்துக் கொள்ளுமாறு கவிஞருக்குத் தந்து, பிறகு, கவிஞரை நோக்கி, ஐயா! சொற்பொழிவு களில் என்னைக் குறைவுபடுத்தினும் பாடல்களில் குறைவு படுத்தி எழுதாதீர்கள்-என்று கேட்டுக் கொண்டாராம். கவிஞரின் பாடலுக்கு அவ்வளவு மதிப்பு உள்ளது. சின்ன பணம் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் முது பெரும்புலவர்; தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை மிக்கவர்; உ.வே. சாமிநாத ஐயர் பெற்றிருந்ததைப் போலவே ம்கா மகோ உபாத்தியாயர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்