பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்; தமிழ் அறிஞர்களிடையே இவருக்கு ஒர் உயர்ந்த இடம் உண்டு.இவர் தலைமையில் யான் (சு.ச.) மயிலத்திலும் இர். காழியிலும் சொற்பொழி வாற்றி யுள்ளேன். இத்தகைய பெரியாருக்கும் பாவேந்தருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் விவரம் வருமாறு: பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், புதுச்சேரியில் முன்பு செயல்பட்ட இளைஞர் கழகம் என்னும் கழகத்தில் சொற்பொழி வாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது எளிய நடைப் பாடல்கள் இயற்றுவோரை மட்டமாகச் சாடி னார். 'வெள்ளைக்காரப் பணம் சின்ன பணம்-அது வேடிக்கை காட்டுது வெள்ளிப் பணம்' என்னும் எளிய நடைப் பாடலைக் குறிப்பிட்டு, இது போன்றவை எல் லாம் பாடல்களா? இன்ன பாடல்கள் இவ்வூரிலும் எழுதப் படுகின்றன-என்று குத்தலாகப் பேசினார். அக்கூட்டத்தில் பாரதிதாசனாரும் அமர்ந்திருந்தார். எளிய நடைப் பாடல் களைப் பண்டிதமணி சாடியது கவிஞருக்குப் பிடிக்கவில்லை. மோதல் உருவாகிக் கொண்டிருந்தது. மேலும், பண்டித மணி, சின்ன பணம்’ என்னும் வழக்காறு பொருந்தாது. தமிழ் இலக்கியங்களில் சின்ன? என்னும் சொல் இடம் பெறுவதில்லை; அது மிகவும் கொச்சை வழக்காகும்; சிறிய” என்னும் வழக்காறே பொருத்தமானது என்றும் கூறிவைத்தார். கேட்ட கவிஞர் உரியவரின் இசைவு பெற்றுப் பேசலா னார். எளியநடைப் பாடல்களின் தேவையை விளக்கினார். பின்னர்ச் சின்ன என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு இது சிறிய என்னும் பொருளில் இல்லை; சின்னம்