பக்கம்:பாரதி லீலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைத்த தென்னக்தோப்பு ' வறியவ னுடைமை - அதனை வாயு பொடிக்க வில்லை ’ ஊருக்கு வெளியே ஒரு சிறு தென்னக் கோப்பு. அத்தோப்பின் நடுவிலே ஒரு மடு, பாரதியார் தம் மனேவி மக்களுடன் அடிக்கடி அந்தத் தோப்புக்குச் செல்வார். காலையிலே எழுங் திருந்து பாரதியார் தோப்புக்குப் போய்விடு வார். சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு அவர் மனேவியாரும் குழந்தைகளுடன் அந்தத் தோப்புக்குப் போவார். காலையிலே சென்ற பார தியார் பதினுெருமணிவரை அந்த மடுக்கரையில் உட்கார்ந்து ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார். பதினுெருமணியானதும், எழுதுவதை கிறுத்தி விட்டு அந்த மடுவிலே இறங்கி நீராடுவார் ; சூரிய னேப் பார்த்துக்கொண்டே அரைமணிநேரம் இடுப் பளவு ஜலத்தில் கின்றுகொண்டு வேத மந்திரங் களே ஜெயிப்பார். ஸ்நானம் முடிந்தபின் சாப் பிட்டுவிட்டு மரநிழலில் இளேப்பாறுவார் ; மறுபடி யும் ஏதாவது எழுதுவார். சாயங்காலம் எல்லாரு மாகத் திரும்பி விடுசேர்வர். அந்தத் தோப்பு முத்தியாலுப்பேட்டை வெல்லச்சு செட்டியார் என்ற கிருஷ்ணசாமி செட்டியாருடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/14&oldid=816531" இலிருந்து மீள்விக்கப்பட்டது