பக்கம்:பாரதி லீலை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 பாரதியார் உல்லாசமாகக் காலங் கழிக்கவேண்டு மென்பதற்காகச் செட்டியார் அந்தத் தோப்பைப் பாரதியார் உபயோகித்துக்கொள்ள அனுமதித் திருந்தார். பாரதியார் குயில்பாட்டுப் பாடியதும் இந்தத் தோப்பில்தான். கிற்க. புயல் அடித்த மறுநாள் காலை பாரதியார் தமது தோப்பினைப் பார்க்கச் சென்ருர். போய்ப்பார்த் கால் பக்கத்துத் தோப்புகளில் எல்லாம் ஆயிரக் கணக்கான தென்னே மரங்கள் முறிந்து கிடந்தன. ஏராளமான சேதம். ஆனல் பாரதியாரின் தோப் பிலோ ஒரு மரங்கூட முறிந்து விழவில்லை. அதைக்கண்டவுடனே பாரதியாருக்கு ஆனக் தம் பொங்கியது. ஏழையாகிய பாரதியாருக்கு எவ்வித நஷ்டமும் அளிக்கக் கூடாதென்றே கட வுள் அந்தத் தோப்பில் சேதம் விளக்கவில்லை யென்று கினைத்தார் ; உடனே கடவுளின் கரு ணேயை வியந்து பிழைத்த தென்னந்தோப்பு ' என்ற தலைப்புள்ள பாட்டைப் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/15&oldid=816532" இருந்து மீள்விக்கப்பட்டது