பக்கம்:பாரதி லீலை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 கேட்க மாட்டேன் என்கிறீர்களே ' என்று சொல்லிக் கொண்டு வந்து பின்னே எறிந்து விட் டுப் போனுர், உடனே பாரதியாரின் முகம் சுண்டிப்போ யிற்று. ஏதடா மூன்ருவது மனுஷர் எதிரிலே நமது மனேவி நம்மை இகழ்கிருளே என்ற எண் ணமோ என்னவோ தெரியவில்லை. தம் குழந் தையான பாபாவைக் கூப்பிட்டார். பாபா ! பாபா அம்மாகிட்டபோயி சட்டையைத்துவைக்க வேண்டா மென்று சொல்லு ' என்று உத்தரவு போட்டார் ; அப்படியும் அவர் மனம் கிம்மதி யடையவில்லை ; தம்பி சிறிது நேரம் இங்கேயே உட்கார்ந்திரு. இதோ வந்து விடுகிறேன் ' என்று சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குள் போளுர் ; போய், சிறு குழந்தை மாதிரி விம்மி விம்மி அழுதார் ; அரைமணி நேரம் அந்த மாதிரிஅழுத பின்பு கண்ணேத் துடைத்துக் கொண்டு நண்பர் இருக்குமிடத்துக்கு வந்தார் தம்பி ஸம்ஸாரம் பண்ணுவதென்ருல் ஸாமானியமா? எவ்வளவோ கஷ்டம் ” என்று கூறினர். கவிஞர் மனம் எவ் வளவு இளகியது என்பதை இதிலிருந்து அறிய லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/21&oldid=816538" இருந்து மீள்விக்கப்பட்டது