பக்கம்:பாரதி லீலை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ம இன ம | ண் பு ' காக்கை குருவி எங்கள் ஜாதி ’ பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண் டிக்காகக் கொடுக்கும் காசைக் கண்டபடி செல வழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனேவியார்க்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும்வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக்கொண்டு காத்திருப் பார். பாரதியார் விடுவந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டுவந்து கொடுப்பார். எதடா! நாள்முழுதும் பட்டினி கிடந்தோமே ! இதை அப்படியே கின்றுவிடுவோம்' என்ற எண் ணம் அந்தப் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார் ; பூனக்குக்கொஞ்சம் ; காக்காய்க்குக் கொஞ்சம் ; போக மீதியைத் தின் பார். என்ன மனுஷர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/24&oldid=816541" இருந்து மீள்விக்கப்பட்டது