பக்கம்:பாரதி லீலை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுண்டைக்காய் பூமி மன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினர் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா? எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனல் மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண் டாம் ' என்ற இறுமாப்புக் கொண்டவரன்ருே நம் பாரதியார் ?

  • எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறர். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிற தென்று சொல் ' என்றுகூறி பாரதியார் சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/33&oldid=816551" இருந்து மீள்விக்கப்பட்டது