பக்கம்:பாரதி லீலை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளமையிற் கல் ஒரு நாள் தெரு வழியாகவே பாரதியார் இன்னெரு நண்பருடன் போய்க்கொண்டிருந் தார். அப்பொழுது ஒரு சிறுவன் இளமையிற் கல் என்று வாசித்துக் கொண்டிருந்தான். அதைக் கேட்டவுடனே பாரதியார் முதுமையில் மண் என்று சிரித்துக் கொண்டே கூறினர். கூடவிருந்த நண்பர் இவர் என்னடா இப்படிச் சொல்கிருரே ' என்று கினேத்தார். திடீரென்று பாரதியார் அப்படியே நடுத்தெருவில் கின்று கொண்டார்.

  • இளமையில் கல் என்று மாத்திரம் சொல்லி தமக்கு நல்ல கல்வி யளியாததாலே இரண்டு தலை முறையாக நாம் இளமையில் கல்லாகி விட்டோம். இப்பொழுது மண்ணுய்ப் போனுேம் என்று கூறினர். சமயோசிதமாகச் சடக்கென்று நகைச் சுவையுடனே பேசுங்குணம் பாரதியாருக் கிருந் தது என்பதற்கு இதுவே அக்காட்சி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/48&oldid=816567" இருந்து மீள்விக்கப்பட்டது