பக்கம்:பாரதி லீலை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சக்தி காப்பாள்

  • அன்பு வடிவாகி நிற்பள்

துன்பெலா மவளிழைப்பள் ஆக்க நீக்கம் யாவுமவள் சேய்கை ” நாஸ்திகர் ஒருவர் அரவிந்தர் ஆசிரமத்துககு வந்தார். அரவிந்தர் அவரை வ. வே. சு. அய்ய ரிடம் அனுப்பி ஆஸ்திகராக்குமாறு கூறினர். வ. வே. சு. அய்யர் ஐயோ! இது என்னுல் முடி யாத காரியமாச்சே! பாரதியிடம் போ' என்ருர், நாஸ்திகரும் பாரதியிடம் வந்தார். நாஸ்திக நண்பரும் வேறு சிலரும் பாரதியுடன் அவர் விட்டு மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக் கின்றனர். அப்பொழுது பாபா திடீரென்று மாடியிலிருந்து கீழே விழுக்து விட்டது. குழந்தை மாடியிலிருந்து விழுந்தால் பரபரப்புடன் ஒடுவ தன்ருே வழக்கம்? ஒம் தத்ளத் முற்றிற்று ’ என்று சொன்னுராம் பாரதியார். சொல்லிவிட்டு அவர் பாட்டிலே யாதொரு கவலையுமில்லாது பேசிக்கொண்டிருக்கிரு.ர். என்ன ஐயா! குழர் தைக்கு என்னவென்று பார்க்காமல்பேசிக்கொண் டிருக்கிறீர்' என்று கேட்டார் ஒருவர். காப் பாற்றுவதற்குப் பராசக்தி யிருக்கும்பொழுது நான் ஏன் போக வேண்டும்?' என்று பதிலளித் தார் பாரதியார். இவ்விதம் பேசிக்கொண்டிருக் கும்பொழுதே கீழே விழுந்த குழந்தை யாதொரு காயமுமின்றிச் சந்தோஷமாக மேலே ஓடிவந்தது. நாஸ்திக நண்பர் இதுகண்டு பிரமித்துப்போர்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/50&oldid=816570" இருந்து மீள்விக்கப்பட்டது