பக்கம்:பாரதீயம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f OC) பாரதீயம்

என்கின்றார். ஜாரரசனைச் சூழ்ந்துகொண்டு முகத்துதி பாடி அவன் பாட்டுக்குத் தாளம் போடும் சுயநலவாதிகள் சரிந்ததை, சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி

அறங்கொன்று சதிகள் செய்த சுமடச்சட சடவென்று சரிந்திட்டார்,

புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போல.31

என்று காட்டுவர். இதனை மேலும்,

இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்

கிருதயுகம் எழுக மாதோ!” என்று குறியீட்டாக விளக்குவர்.

வறுமைத் துன்பத்தில் வாடிய கவிஞருக்குப் பசிப்பிணி என்பது நன்கறிந்த அநுபவம். சமூகத்தில் பலர் உணவின்றி வாடுதலைக் காணக் கவிஞருக்கு மனம் பொறுக்க முடியவில்லை. ஏதாவது தொழில் செய்து பிழைக்கவேண்டும் என்பது கவிஞரின் அதிராக் கொள்கை,

முன்புகிற் கின்ற தொழிலே சக்தி

முக்தி நிலையின் முடிவே சக்தி. 89 என்ற கூற்று இதனை அரண் ச்ெப்யும்.

வையகம் காப்பவரேனும்-சிறு

வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். 70 என்ற பாடல் பின்னும் இந்த அரணுக்கு வலிவூட்டும். இரத்து வாழ்தல் பாரதியாருக்குப் பிடிக்காத செயல்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.’

என்று பாடிய வள்ளுவர்வழி வந்தவர் நம் கவிஞர் பெருமான். பாரத சமுதாயம் எப்படி பிருக்க வேண்டும் என்பதை,

67. .ை டிை-5

63. .ை -ை6

69. தோ. பா. 21 சக்தி-1 70. புதிய பாடல்கள்-19 உயிர் பெற்ற தமிழர் பாட்டு-14 71. குறள்-1052

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/116&oldid=681136" இலிருந்து மீள்விக்கப்பட்டது