பக்கம்:பாரதீயம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! #0 பாரதீயம்

எம்பெருமான் ஒரு பொறியியல் வல்லுநராக நின்று சித்தாகிய பல பொறிஞர்களைக்கொண் டு, அசித்தாகிய கல், மண், சீமைக்காரை (c:ment) முதலியவற்றின் துணைகொண்டு மேட்டுர் அணை, வைகையணை போன்ற அணைகளைக் சட்டுவித்து, நீரைத் தேக்கி, நீர்ப்பாசனத் திறனை விரிவாக்கி, இன்றுைங்கனிச் சோலைகள், பச்சைப்பட்டு விரித்தாற்போன்ற நெல் வயல்கள், இயற்கை வளஞ் செறிந்த பிருந்தாவனம் போன்ற இளமரக் காக்கள் (கர்நாடக மாநிலத்திலுள்ளது) போன்றவற்றைத் தோன்றச் செய்து, இவை போன்ற எத்தனையோ கோலங்கள் புனைவித்து, நமக்குத் தேவை யான விதவிதமான வசதிகளையெல்லாம் அமைத்து, இந்த உல கினைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்’ நுகர்தற்குரிய வண்ணக் களஞ்சியமாக ஆக்குவித்த அற்புதத்திறனை எண்ணி எண்ணி வியக்கின்றார் கவிஞர். இறைவனின் கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்பைத் திருமுருகாற்றுப்படையில்வியந்து போற்றினார் நக்கீரர் பெருமான்; நம் புதுமைக் கவிஞர்- புதுவைக் கவிஞர்- இறைவன் தோன்றாத் துணையாக நின்று சித்தைக் கொண்டு இயற்றிய கைபுனைந்தியற்றிய கவின்பெறு வனப்பினைக் கண்டு களிக்கின்றார். இதனால் விசிட்டாத்துவித தத்துவத்தையும்’ ஒருவகையில் விளக்கம் பெறச் செய்துவிடுகின்றார். . . . . .

தொழில் வளமும் தொழிற்கல்வியும் பெருக வேண்டும் என்பதை,

  • - தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்-அதில்

பல்லோர் துணைபுரிதல் வேண்டும்;

கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல்

கொள்ளும் கோடிவகைத் தொழில்கள்-இவை நாடும் படிக்குவினை செய்து-இந்த

நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்கக்-கவி சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி

தாயே! உனக்கரிய துண்டோ?

என்ற கவிதைப் பகுதிகளில் தெரிவிக்கின்றார். இப்படித் தமக்கு ஒரு பேராசை இருப்பதை ஓம் காளி, வலிய சாமுண்டி தேவதை யிடம் காட்டி, இந்த ஆசையை நிறைவேற்றும்ாறு கோடி முறை: தொழுகின்றார்.

வேளாண்மைத் தொழிலுக்கும் கைத்தொழில் போன்றவற் றிற்கும் மதிப்புத் தரும் கல்வியைப் போற்றுகின்றார். உழவுக்கும்

18. தோ. பா. யோக சித்தி-7, 9,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/126&oldid=681147" இலிருந்து மீள்விக்கப்பட்டது