பக்கம்:பாரதீயம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் 1 if

யில் ஏன் இயங்கக் கூடாது என்ற வினாவும் எழத் தொடங்கியது. மேனாட்டு இலக்கியப் புரட்சிகளின் தாக்கமும் ஆங்கிலக் கல்வியின் வாயிலாக நமக்குக் கிடைத்தது.

மேனாடுகளில் இலக்கியப் புரட்சி ; மேனாடுகளின் அண்மைக் காலத்து இலக்கிய வரலாற்றை நோக்கினால் கவிதை இலக்கியத்தின் யாப்பமைப்பு ஆட்டம் கொண்டது தெளிவாகும். புதிய சமுதாயத் தின் சிந்தனை வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்த வேகத்திற் கேற்பப் பழைய யாப்பு வடிவங்களால் இயைந்து கொடுக்க முடிய வில்லை. இந்நிலையில் மக்களிடம் புதினம் ஏற்படுத்தின. செல்வாக் கும் இதழ்த்துறையில் தொடர்கதைகளுக்கு ஏற்பட்ட பரபரப்பான வரவேற்பும் கவிதைக்கு எதிர்காலமே இல்லையோ என்ற ஐயமும் தோன்றத் தொடங்கியது. யாப்பு வடிவங்களைத் தகர்த்தெறியவும் கவிதையில் புதிய தொடர் அமைப்பை (Syntax) ஏற்கச் செய்ய வும் பல புது முயற்சியாளர்கள் முன்வந்தனர் ; செயலாற்றவும் தொடங்கினர். மொழியைப் புதிய முறைகளில் செயற்படச் செய் தால்தான், வளர்ந்து வரும் கருத்துச் செல்வ வெளியீட்டிற்கு அஃது இயைந்து கொடுக்கும் ஆற்றலைப் பெறும் என்று நம்பினர்.இவர்கள் முயற்சியால்தான் வசன கவிதை (Prose-Poetry), கட்டற்ற <5676).5 (Vers-fibre) என்ற கவிதை வடிவங்கள் தோன்றின. -

அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங்களைக் காண்போம். வால்ட் &ll-Glupsir (Walt Whitman) stor irri (1819-1892) 31b. பன்னிரண்டு கவிதைகளைப் புல்லின் இதழ்கள் என்ற தொகுப்பாக 1855-இல் வெளியிட்டார். இக்கவிதைகளில் ஆங்கில மொழிக் கவிதையின் யாப்பு மரபு பின்பற்றப்பெறவில்லை; அதனைப் புறக் கணித்துவிட்டு எழுதப்பெற்ற கவிதைகள் வசனமாகவே அமைந் திருந்தன. அடிகளிலும் அம்மொழிக் கவிதைமரபிற்கேற்ப வரும் இயைபுத் தொடை (Rhyme) காணப்பெறவில்லை. சொற். கட்டமைப்பால் தோன்றும் ஆற்றலே கவிதைக்கு வடிவம் கொடுத்து விடுவதாகக் கூறுவர் விட்மென். இவர் கையாண்ட கவிதை வடிவமே சுயேச்சைக் கவிதை (Free verse) அல்லது இலகு கவிதை என்ற வசன கவிதையாகச் செல்வாக்குப் பெற்றது. கவிதையின் உள்ளடக்கத்திலும் புதுமைத் தன்மையைக் காணமுடிருந்தது. கவிதை களும் இதுவரை பேசாப் பொருள்கள்பற்றியும் அமைந்தன. ஹோமர், மில்ட்டன் போன்ற மிகப்பெருங் கவிஞர்களின் படைப்பு களில் மனநிறைவு பெறாத எமர்சன் விட்மெனின் கவிதைகளால் ஈர்க்கப்பெற்றார். பேசாப் பொருளைப் பேசத் துணிந்த’ ‘பாரதி யாரையும் இக்கவிதைகள் கவர்ந்தன. விட்மெனின் அடிச்சுவட்டைப்

l, வி. p5T, fr. 32,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/133&oldid=681155" இலிருந்து மீள்விக்கப்பட்டது