பக்கம்:பாரதீயம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் {2}

யாப்பு பெற்று உரைநடைபோல் இருந்துவிட்டால் அது வசன கவிதையாகாது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, எது வசன கவிதை? என்பதைத் தெளிவு பெறுக. மேனாட்டார் தோற்றுவித்த வசன கவிதைப் பாணியில் பாரதியார்தான் முதன் முதலாகத் தமிழில் வசன கவிதைகள் எழுதிச் சோதனைகள் செய்து வெற்றி கண்டவர். இந்த வசன கவிதைதான் அடுத்துத் தோன்றிய புதுக் கவிதைக்கு மூலமாக-தாயாக-அமைந்தது என்று சொல்லலாம்.

வசன கவிதை என்ற தலைப்பில் 1. காட்சி. முதற்கிளை : இன்பம் என்ற தலைப்பில் 7 கவிதைகளும்; இரண்டாங் கிளை. புகழ்? -ஞாயிறு என்ற தலைப்பில் 13 கவிதைகளும், 2. சக்தி என்ற தலைப் பில் 8 கவிதைகளும், 3. காற்று என்ற தலைப்பில் 15 கவிதைகளும்; 4. கடல் என்ற தலைப்பில் 2 கவிதைகளும்; 5 ஜகத் சித்திரம் என்ற தலைப்பில் 5 காட்சிகளடங்கிய ஒரு சிறு நாடகமும்; 6 விடுதலை என்ற தலைப்பில் இரண்டு காட்சிகளைக் கொண்ட ஓர் ஓரங்க நாடக மும் காணப்பெறுகின்றன. இந்தக் கவிதைகளை ஆழ்ந்து கற்போர் பாரதியாரின் தத்துவத்தையும் வசன கவிதைகளின் போக்கையும் தெளிவாக அறியலாம்.

தமது கவிதையுணர்வுகளையும், அகத்தெழுச்சிகளையும், கனவுகள்; கற்பனைகள், முற்போக்கு எண்ணங்கள், சமுதாயப் பார்வைகள், நாட்டு நிலைகள் ஆகிய அனைத்தையும் மரபு நிலை கெடாத, எளிய, இனிய, புதிய புதிய யாப்புகளில், சந்த நயங்கட்கு உட்படும் பல்வேறு புதிய வடிவங்களில் வெளிப்படுத்திய பாரதியார் இலக்கண விதிகட்குக் கட்டுப்படாத வடிவத்திலும் கவிதைகளைப் படைக்க முயன்றுள்ளார். இந்த முயற்சிகளின் விளைவுகளே வசன கவிதைகளாகும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வசனத்தை மீறி யவையாயினும், கவிதையின் முழுத் தன்மையை எய்தாத ஒரு முயற்சி யாகவே படைத்துள்ளார் என்று கருதலாம். இதிலுள்ள முதற் கவிதை,

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து;

காற்றும் இனிது. தீஇனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.

என்று தொடங்கிச் செல்லுகின்றது. இது வசனமா கவிதையா

7. பாரதியார் கவிதைகள் (வானவில் பிரசுரம்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/137&oldid=681159" இலிருந்து மீள்விக்கப்பட்டது