பக்கம்:பாரதீயம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 பாரதீயம்

அமிழ்தம், பயன்வரும் செய்கையே அறமாம். அச்சமே நரகம்; அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க.

என்ற உண்மையை அறவுரையாக-அறிவுரையாகத் தருகின்றது.

மரபுக் கவிதைகளையே படித்துப் பழகியவர்கள் யாப்பு முறை யில் அமைந்த புறவடிவத்தையே- செய்யுளையே- கவிதை என்று கருதுகின்றனர். வெற்றெனத் தொடுத்த சொல்லடுக்குகளையும் கவிதை என மயங்குகின்றனர். இவர்கள் வசன கவிதைகளைக் கவிதை என்று ஒப்புக்கொள்வதில்லை. உண்மையான கவிதை எது என்பதைச் சோதித்து அறியும் சுவைஞர்கட்கு-கவிதைத் திறனாய் வாளர்கட்கு- வசனத்திலும் கவிதை தட்டுப்படும். இக் காலப் புதுக்கவிஞர் ஒருவர் புராணத்தில் வரும் மன்மதனை ஒவியத் தில் எழுதிக் காட்டுவதற்கு ஒப்பானதாகும். சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் ரதிதேவியின் கண்களுக்கு மட்டிலுமே தென்படுவானாம். அதுபோல இலக்கணத் தெய்வத்தின் நெற்றிக்கண் நெருப்புக்கு இரை யான புதுக்கவிதையின் உருவமும் உண்மையான இலக்கிய ரதி களுக்கே தென்படக்கூடும் ?? என்று கூறிய கூற்று வசன கவிதை கட்கும் பொருத்தும்.

பாரதியாரின் வசன கவிதைகள் அனைத்திலும் கவிதையைக் காண லாம். அஃது உண்மையான இலக்கிய ரதிகளுக்கு மட்டிலுமே தென்படும் என்று சொல்லி வைக்கலாம்.

வங்கக் கவிஞர் இரவீந்திர நாத தாகூர் தம் கீதாஞ்சலி என்ற வங்க மொழியில் எழுதப்பெற்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யும்போது அதை வசன நடையிலேதான் செய்தார். இந்த மொழி பெயர்ப்பிலேயே ஐரிஷ் கவிஞர் யேட்ஸ் தாகூரை அறிந்து உலகம் அறியப் போற்றிப் புகழ்ந்தார். நூலாசிரியர் கையாண்ட எளிமை, அழகு, ஆன்மிகத் தேடல் இவற்றை வெளிப்படுத்தியிருந்த முறையை உணர்வதற்கும் போற்றுவதற்கும் வசனம் ஒரு தடையாக அமையவில்லை. தாகூரின் மொழிபெயர்ப்பாளர் காரைக்குடி வி. ஆர். எம். செட்டியாரும் தமிழில் கீதாஞ்சலியை மொழிபெயர்க் கும்போது இதே உண்மையைக் காண்கின்றார். கவிதையின் உள்ளத் தீயை இம்சையின்றி வசன காவிய நடையில்தான் பிரதி பலிக்கச் செய்ய முடியும்....பாரதியாரின் ஞான ரதமும், காட்சி களும் வசன காவிய நடையிலேயே அமைந்திருக்கின்றன: என்பது அவர்-சுற்று. 1913-இல் தாகூரின் கீதாஞ்சலி கவிதைகள்:

23. மீரா :புதுக் கவிதையில் உருவம் (அன்னம் மலர்-1976) 24. செட்டியார், வி._ஆர். எம்: இரவீந்திர நாத் தாகூரின்

வாழ்க்கையும் கவிதையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/150&oldid=681174" இலிருந்து மீள்விக்கப்பட்டது