பக்கம்:பாரதீயம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 48 பாரதீயம்

மாலை முழுதும்விளை யாட்டு-என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

என்று குழந்தைகட்குப் படிப்புக்கும் உடற்பயிற்சிக்கும் ஊக்கம் காட்டுகின்றார். குழந்தைகட்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இன்றியமையாதவை என்பதை,

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா !

சாதி வேற்றுமையைக் களையும் பாங்கில், சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்; நீதி உயர்ந்தமதி கல்வி-அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.

என்று பிஞ்சு மனங்களில் உயர்ந்த கருத்துகளை விதைக்கின்றார்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடையநெஞ்சு வேணும்;-இது

வாழும் முறைமையடி பாப்பா!

என்று அருட்பெருஞ்சோதி வள்ளலார் பாணியில் பாப்பாவிடம் பேசுகின்றார். பெண் கல்விக்கும் பெண்ணுரிமைக்கும் முன்னுரிமை அளிக்கும் கவிஞர் பாப்பாவுக்கு (பெண் பிள்ளை) அறவுரை கூறுவது நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

படித்துப் பதவிகளிலிருப்பவர்க்கு -இன்று நாட்டில் படித்துப் பல துறைகளிலும் பணியாற்றுபவர்கட்கும் நீதி வழங்குகின்றார். எங்கும் கடமை உணர்வும், பொறுப்புணர்வும் இல்லாமையைக்

காண்கின்றோம். தாம் வகிக்கும் பதவியை வைத்துக்கொண்டு சொல்லுவதற்கே கூச்சப்பட வேண்டிய அக்கிரமங்கள் நடப்பது எங்கணும் பெருவழக்காகிவிட்டது. கல்லூரிகளிலும் பல்கலைக்

கழகங்களிலும் மதிப்பெண்கள் வழங்குவதிலும், மதிப்பெண் பட்டி யலை மாற்றுவதிலும் நடைபெறும் ஊழல்கள் சொல்லி முடியா. கலப்படக்காரர்கள், கள்ள வணிகர்கள், கடத்தல் பேர்வழிகள்இவர்கள் நாட்டில் விளைவிக்கும் ஊழல்கள் ஆயிரமாயிரம். இவற் றிற்கெல்லாம் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல்வாதிகள் புரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/164&oldid=681189" இலிருந்து மீள்விக்கப்பட்டது