பக்கம்:பாரதீயம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 80 பாரதீயம்

என்று பேசும்போது வேம்பின் கசப்புச் சுவையும். சருக்கரையின் தீஞ்சுவையும் நம் மனத்தில் தட்டுப் படுகின்றனவல்லவா?

கண்ணன் பாட்டில் சுவைப்புலப் படிமங்கள் தென்படு கின்றன.

2.8 உண்ணத் தெவிட்டர்தே-அம்மை

உயிரெனும் முலையினில் உண்ர்வெனும் பால்;

வண்ணமுற வைத்தெனக் கே-என்றன்

வாயினிற்கொண் டுட்டுமோர் வண்மையுடையாள் (2)

இதில் தெவிட்டாத பாலின் சுவையை உணர முடிகின்றது. விளை யாட்டுப்பிள்ளையாகிய கண்ணன் செய்யும் சிறு குறும்புகளைக் கவிஞர்,

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (9)

பாடலைப் படிக்கும்போதே பழத்தின் சுவையை உணர்கின்றோம். கண்ணனாகிய காந்தனைக் குறிப்பிடும்போது,

கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய் (15)

என்பார் கவிஞர். இந்த அடியைப் படிக்கும்போதே கனிகளின் சுவை யையும் கற்கண்டின் சுவையையும் நம் மனம் உணர்கின்றதன்றோ? காதலி கண்ணம்மாவைக் குறிப்பிடும்,

ஆசை மதுவே கனியே

அள்ளு சுவையே கண்ணம்மா (21)

என்ற அடியைப் படிக்கும்போது மதுவின் சுவையும் கனியின் சுவையும் மனத்திற்குத் தட்டுப்படுவதை உணர முடிகின்றது.

இதர பாடல்களிலும் இந்தச் சுவைப்புலப் படிமங்களைக் கான லாம்.

தங்க மதலைகள் ஈன்றமு தாட்டித்

தழுவிய திந்நாடே.” இந்த அடியைப் படிக்கும்போதே மதலைகட்கு ஊட்டப்பெறும் அமுதின் சுவையை உணர முடிகின்றது. 13. தே.கி. நாட்டு வணக்கம்-3,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/196&oldid=681224" இலிருந்து மீள்விக்கப்பட்டது