பக்கம்:பாரதீயம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கன் 18

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள்-சிறு

வள்ளி 14 என்று வள்ளின்ய்க் குறிப்பிடும் அடியில் தேனின் சுவை தட்டுப்படு கின்றது.

காற்றப்புலப் படிமங்கள் : இவ்வகைப் படிமங்களும் அரியன வாகவே அமைந்துள்ளன. பாஞ்சாலி சபதத்தில் இராசசூயப் பெரு வேள்வியினைத் தருமன் நடத்தியபொழுது பல நாட்டு மன்னர்களும் மக்களும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்ததைத் துரியோதனன் எண்ணி நைகின்றதாகக் காட்டப்பெறும் கவிதைப் பகுதி இது:

பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் -

பூத்திடும் சந்தனம் அகில் வகைகள்

ஏலம் கருப்பு ரம்-நறும்

இலவங்கம் பாக்குநற் சாதிவகை கோலம் பெறக்கொணர்ந் தே-அவர் - கொட்டி நின்றார்.கரம் கட்டிநின்றார். இப்பகுதியினை நாம் படித்துச் சுவைக்கும்போது மணப்பொருள் களின் மணம் நம் மனத்தைத் துளைப்பதை உணர்கின்றோம்.

நாடுறு தயிலவகை-தறு

நானத்தின் பொருள்பலர் கொணர்ந்துதந்தார்

என்ற அடிகளைப் படிக்கும்போது தயில வகைகளின் வாசனையும் கஸ் தூரியின் நறுமணமும் நம் மூக்கைத்துளைப்பதாக உணர்கின்றோம்.

கண்ணன் பாட்டிலும் நாற்றப் புலப்படிமங்கள் கவிதைக்குப் பொலிவூட்டுகின்றன. காதலி கண்ணனாகிய காதலனைக் கானகத் தில் தேடுகின்றாள். கானகத்தை வருணிக்கும் பகுதியில் வரும் நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்: என்ற அடியில் வாசன்ை யின் உறைப்பினை மனம் உணர்கின்றது. கண்ணனாகிய காத்தன் தனக்குத் தரும் பொருள்களைக் காதலி பட்டியலிட்டுக் காட்டு கின்றாள் ;

பணிசெய் சந்தனமும்-பின்னும்

பல்வகை அத்தர்களும், குனியும் வாண்முகத் தான்-கண்ணன்

குலவி நெற்றியிலே இனிய பொட்டிட வே-வண்ணம்

இயன்ற சவ்வாதும் 14. தோ.பா. வேலன் பாட்டு-1. 15. கண்ணன்-என் காதலன்.-(3)-2,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/197&oldid=681225" இலிருந்து மீள்விக்கப்பட்டது