பக்கம்:பாரதீயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரதீயம்

களைச் சிந்திக்கச் செய்யும்படி முருகனிடம் சொல்லுமாறு கிளிக்குப் பணிக்கின்றார். இந்தப் பாடலில் சங்க இலக்கிய மரபு நிழலிடுவதைக் காணலாம். இதனைத் தவிர வேறு இரண்டு பாடல்கள் முருகன் வள்ளிக்குத் துரது விடுக்கும் பாணியில் அமைந்துள்ளன. முருகன் இமக்கு அருள்வதை,

வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்

காலைப் பணிந்தால் கவலைபோம்: என்று தெளிவுதுத்துகின்றார். ஆறுதுணை என்ற பாடலில் வெற்றி வடிவேலன் இவருக்கு மூன்றாவது துணையாக அமைகின் தான். இன்னொரு பாடலில்,

துசய பெருங்கனலைச் சுப்பிர மண்ணியனை கேயத்துடன் பணிந்தால்-கிளியே நெருங்கித் துயர்வருமோ ?” என்று முருக வழிபாடு கம் துயர்களை வெருட்டியோட்டிவிடும் என்கின்றார்.

கணமகள் : மூன்று காதல்’ என்ற பாடலில் தம்முடைய முதல் காதல் கலைமகள் மீதுதான் என்று குறிப்பிடுகின்றார். இளமைக் காலத்தில் பள்ளிப் படிப்பில் மதி பற்றிடவில்லை’ யென்றாலும், கலைமகளின்பால் தம் வெள்ளை மனது பறி கொடுத்ததைக் குறிப்பிடுகின்றார். ஆற்றங்கரையில் தனித்ததொரு மண்டபத்தில் தென்றற்காற்றை நுகர்ந்திருந்தபொழுது காமகள் *கன்னிக் கவிதை கொணர்ந்து தந்ததைக் குறிப்பிடுகின்றார். சிறு வயதிலேயே நாமகள் அருள் இருந்ததால்தான் தமக்குக் கவிபாடும் ஆற்றல் கிட்டியது என்பது கவிஞர் பெற வைக்கும் குறிப்பு. ஆறு துணை’ என்ற பாடலில் கலைமகள் கான்காவது துணையாக அமைகின்றாள்.

“பாஞ்சாலி சபதத்தில் கலைமகள் வணக்கமாக இரண்டு காப்புச் செய்யுள்கள் வருகின்றன. முதல் பாடலில் கலைமகளைப் பற்றிய சொல்லோவியம் மிகமிக அற்புதமானது. அவளது இருப் பிடம் வெள்ளைத் தாமரை, அங்குப் புகழுடன் திகழ்வாள். அவள்

16. தோ.பா 7,8. வள்ளிப் பாட்டு-1,2 17. ை 66. விடுதலை வெண்பா-4 18. ை:65. ஆறு துணை-3. 19. ை: 76. கிளிப்பாட்டு-3 20. தோ.பா.: 64. மூன்று காதல் 21. தை 65. ஆறுதுணை-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/54&oldid=681283" இலிருந்து மீள்விக்கப்பட்டது