பக்கம்:பாரதீயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாரதீயம்

கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது’.”

ஆரிய தரிசனம்’ என்ற பாடலில்,

கண்ணனைக் கண்டேன்-எங்கள் கண்ணனைக் கண்டேன்-மணி வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்

  கண்ணன்கற் றேரில்-லேக் கண்ணன்கற் றேரில்-மிக எண்ணயர்க் தானொர் இளைஞனைக் கண்டேன். என்று ‘கிருஷ்ணார்ஜுன தரிசனம்பற்றிக் கூறுவதைக் காண்கின் றோம். இந்தக் கண்ணனைப்பற்றி 23 தொடர்ச்சியான பாடல்களும் 14 தனித்தனியான உதிரிப் பாடல்களும் படைத்துள்ளார். இந்தப் பாடல்களில் கண்ணனைப் பல கோணங்களில் கண்டு மகிழ் வதிலிருந்து கண்ணன்மீது இவர் கொண்டிருந்த ஆ ழ் ங் த பக்தியையும் ஈடுபாட்டையும் கண்டு மகிழலாம். இதனை நன்கு உணர்ந்த புதுக் கவிஞர் ஒருவர் (கவிஞர் வாலி),

} } கோணங்களில் கண்ணனைப் படம் பிடித்த கேமரா- 2 என்று பாரதியாரை ஒரு கேமராவாக்கி (இஃது ஒரு குறியீடு) மகிழ் கின்றார். மேலும், கண்ணன்மீது கவிஞர் கொண்ட ஈடுபாடு இவ்வாசிரியரின் கண்ணன் பாட்டுத் திறன்’ என்ற நூலில் விரிவாக விளக்கம் பெற்றிருப்பதைக் காண்க.

இராமன் : ‘சாகா வரம்’ என்ற ஓர் இசைப் பாடலில் இராமனைப்பற்றிய குறிப்பு வருகின்றது. -

சாகா வரமருள்வாய், ராமா ! சதுர்மறை காதா சரோஜா பாதா !

30. கண்ணன் பாட்டு-இரண்டாம் பதிப்புக்கு வ. வே. சு.

அய்யரின் முன்னுரை (1919). 31. தோ. பா. 58. ஆரிய தரிசனம்-13 32. கல்கி-விடுமுறைச் சிறப்பு மலர்-1981 33. கண்ணன் பாட்டுத்திறன் (சர்வவோதய இலக்கியப்

பனணை-மதுரை - 625 001) 34. தோ, பா : 43. சாகா வரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/58&oldid=681287" இலிருந்து மீள்விக்கப்பட்டது