பக்கம்:பாரதீயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்- சமயக் கொள்கைகள் 59

அன்பில் அழியுமடீ :-கிளியே

அன்புக் கழிவில்லை காண். ச என்று கூறுவதைக் காண்க. பிறிதோர் இடத்தில், தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே : அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-கன்னெஞ்சே : என்று அன்பை வற்புறுத்துவதைக் காணலாம். இன்னுமோர் இடத்தில்,

ஊனுடலை வருத்தாதீர் ; உணவியற்கை கொடுக்கும்

உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!” என்று அன்பு செய்தலை மீண்டும் வற்புறுத்துவதைக் கண்டு மகிழலாம். பிறிதோரிடத்தில்,

அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.” என்று அன்பே சிறந்த தவம் என்பதை வலியுறுத்துவதைக் காணலாம் ; நம் அநுபவத்தாலும் உணரலாம்.

iv. இவர் காட்டும் சமய சமரசம் சமயச் சான்றோர்களுள்தாயுமான அடிகள், இராமலிங்க அடிகள் இவர்களே சமயங்களுள் ஒரு சமரச நிலையை நிலை நாட்ட முற்பட்டவர்கள். சமயச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணப்படாவிட்டாலும் மேற்கூறிய இரு பெரியார்களை அடுத்து, சமயங்களுள் ஒரு சமரச நிலையை ஏற்படுத்த முயன்றவர் பாரதியார் என்று மதிப்பிடுவதில் தவறில்லை. ‘. . . . . . .

எல்லாச் சமயங்கள் கூறும் மந்திரமொழிகள் யாவும் ஒரு பொருளையே குறிக்கும் என்பது பாரதியாரின் தெளிந்த ஞானமாகும். இதனைக் கோவிந்தசாமியின் வாக்காக வெளியிடுகின்றார் கவிஞர்.

ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும்.

ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்

ஒரு மொழி ஒம்.நமச் சிவாய’ என்பர்;

84. தோ. பா. ; 78 கிளிப் பாட்டு-3 85. வே. பா. 23 பகைவனுக் கருள்வாய் - 6 86. ை: 19. அன்பு செய்தல் - 2 87. தோ. பா வி. நா. மா : 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/75&oldid=681306" இலிருந்து மீள்விக்கப்பட்டது