பக்கம்:பாரதீயம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 65

அகிலநோக்கு (Cosmic vision) : பாரதியாரின் அகில நோக்கில் இயற்கை அன்னையின் கோலம் தென்படுகின்றது. அகிலத்தையே பராசக்தி வடிவாகக் காண்கின்றார் கவிஞர்.

மாதா பராசக்தி

வையமெல்லாம் நீ கிறைந்தாப்”

என்கின்றார். இராமனைப்பற்றிய பாட்டொன்றில்,

ஆகாசந் தீகால் நீர் மண்

அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாப்’ என்று அகிலத்தை ஒரு விசுவரூப தரிசனம் போல் காட்டுகின்றார். இன்னோர் இடத்தில்,

விண்டு ரைக்க அறிய அரிதாய்

விரிந்த வானெவெளியென -கின்றனை அண்ட கோடிகள் வானில் அமைத்தனை ,

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை, மண்டலத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட துரம் அவற்றிடை வைத்தனை.’ என்று அகிலத்தின் (Universe) காட்சியைக் காட்டுவார்.

விண்வெளியில் அமைந்துள்ள கோடானு கோடி அண்டங்களைப் பிறிதொரு பாடலில் புலப்படுத்துவார். நக்க பிரானருளால்-இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் : தொக்கன அண்டங்கள்-வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம் ! இக்கணக் கெவரறிவார் ?-புவி

எத்தனை யுளதென்ப தியாரறிவார் : நக்க பிரானறிவான் ;-மற்று

நானறியேன்பிற நரரறியார் ; தொக்க பேரண்டங்கள்-கொண்ட

தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்-ஒளி

தருகின்ற வானமோர் கடல்போலாம் : அக்கட லதனுக்கே-எங்கும் - அக்கரை இக்கரை யொன்றில்லையாம். 10. தோ. பா.: நவராத்திரிப் பாட்டு-1 11. தோ. பா.: சாகா வரம்-1 12. .ை மகா சக்தி வாழ்த்து-1 Lir5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/81&oldid=681314" இலிருந்து மீள்விக்கப்பட்டது