பக்கம்:பாரதீயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இய்ற்கை எழில் 73

போல் இலங்கும் பாற்கடலில் நீயும் அமுதமும் தேசன்றுவது கண்டேன். எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் கண்ணன் அப்பாற்கடலில் சயனித்திருப்பதையும் கண்டேன். ல்ே வண்ணக் கோலம் கொண்ட பராசக்தியையே இந்த உலகமாகக் கண்டேன். பின்னியிருக்கும் மேகச் சடையில் நீயும் கங்கையும் பெட்புடன் இலங்குதல் கண்டேன்.

‘நீ காதலர் நெஞ்சைச் சுடுகின்றாய். ஆனால் நின்னைக் காதல் புரிவார் நெஞ்சிற்கு இன்னமுதமாய் இனிக்கின்றாய். விசும்பாகிய குளத்தில் நீ ஒளிமிக்க வெண்டாமரைபோல் திகழ் கின்றாய். தீமை புரியவரும் கொடியவர்க்கும் கன்மை செய்யும் மேலோர் போல, நின்னை மோதவரும் கருமேகக் கூட்டத்தையும் வெள்ளிய நிலவொளி நல்கி வனப்புறச் செய்கின்றாய். நீ மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திருக்கும் நிலையில் கின் மேனி அழகு எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. இங்கிலையில் மெல்லிய ஆடை கொண்டு மூடியிருக்கும் யவன மங்கையின் மேனி யழகினைப் புலப்படுத்துகின்றாய்.

சொல்லிய வார்த்தையில் நானுற்றனை போலும்

வெண்ணிலாவே - தின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை

வெண்ணிலாவே !’

என்று முகிலினுள் மறைந்து கொள்ளும் காரணத்தை நயமாகக் காட்டுகின்றார். அப்படியானால், சிறியேன் செய்த பிழை பொறுத்து இருட் படலத்தைக் களைந்து ஒளி நிறைந்த கின் முகப்பொலிவைக் காட்டுவாயாக’ என்கிறார். பாரதியாரின் நிலவுபற்றிய புனைவு படிப்போரிடையே பல்வேறு உள்ளக்கிளர்ச்சிகளை எழுப்புகின்றன. எனவே நிலவைக் கூவி அழைக்கின்றார்:

மண்ணுக் குள்ளே அமுதைக் கூட்டிக் கண்ணுக் குள்ளே களியைக் காட்டி எண்ணுக் குள்ளே இன்பத் தெளிவாய் வாராய், கிலவே, வா..?? - - காற்று காற்றுபற்றிய கவிஞரின் புனைவு படிப்போரிடையே கழிபேருவகையை விளைவிக்கின்றது. காற்றை கோக்கிப் பேசு கின்றார் : -

தென்னையின் கீற்றுச் சலசலவென்றிடச்

செய்துவருங் காற்றே : உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர்

உள்ளம் படைத்து விட்டோம்.

2வெசன கவிதைகள்-6 விடுதலைகாட்சி-2 கிலவுப்பாட்டு-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/89&oldid=681323" இலிருந்து மீள்விக்கப்பட்டது