பக்கம்:பாரதீயம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாரதீயம்

காட்டுவளம் : நாட்டுவளம்பற்றிய கவிஞரின் புனைவு மிக சேர்த்தியாக அமைந்துள்ளது. அத்தினபுரத்தில் அமைத்த அழகிய மண்டபத்தைக் கானப் பாண்டவர்களை அழைத்து வருவதற்காகச் சென்ற விதுரன் அடவிமலை ஆறெல்லாம் கடந்து சென்று பாண்டவர்கள் அரசுபுரியும் இந்திரப் பிரத்தத்தின் அருகில் செல்லும் போது வழியிடையே தான் கண்ட நாட்டு வளத்தின் சிறப்பை கோக்கி, இத்தகைய காடு காசமெய்தத் தான் துணைபுரிய கேரிட்டதை தினைந்து மனத்திற்குள் இரங்கி வருந்துகின்றான். பாரத காட்டின் பெருமையை விதுரன் வாய்மொழியாக, நீலமுடி தசித்தபல மலைசேர் நாடு,

சேமுதம் எனப்பாய்ந்து கிரம்பும் காடு கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங் குளிர்காவுஞ் சோலைகளும் குலவு நாடு ஞானமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல

கன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப் பால டையும் கறுகெய்யும் தேனுமு ன்டு

பண்னவர்போல் மக்களெல்லாம் பயிலும் காடு.”* என்று வருணிப்பர் கவிஞர். கங்கைகதி பாயும் பகுதியும் பஞ்சாப் மாநிலப் பகுதியும் கவிஞர் மனத்தில் இத்தகைய எண்ணத்தை எழுப்பியிருக்க வேண்டும் என்று கருதலாம்.

மேலும், இக்காட்டில் அன்னங்கள் தாமரைத் தடாகத்தில் தவழ் கின்றன. வண்டுகள் பண்ணமிழ்தத்தைப் பொழிகின்றன. கிளிகள் மழலைமொழி பேசுகின்றன. கேட்போர் செவியில் அமுதுரறும் படியாகக் குயில்கள் பாடுகின்றன. பொன் போன்ற மேனி படைத்த பூவையர்கள் தம் காதலர்களிடம் புலவி கொள்ளும்போது காவினத்து கதுமலரின் கமழைத் தென்றல் வீசுகின்றது. திண் டோள் வாய்ந்த வீரர்கள் மகிழுமாறு மடங்தையர் தம் விழிகளாலேயே காதலைப் புலப்படுத்துகின்றனர். இங்கனம் மருதநிலவளம் மாண்புற எடுத்துக்காட்டப்பெறுகின்றது.

நகர்ப் புனைவு : நகரங்கள் செயற்கையாக ஏற்படுத்தப் பட்டவையெனினும் அந்தச் செயற்கையிலும் ஒர் இயற்கை அமைந்து விடுகின்றது. இங்குக் கைபுனைந்தியற்றிய வனப்பை நகர்ப் புனைவில் இயற்கை எழிலாகக் கொள்வதில் தவறில்லை. இவற்றைக் கைபுனைந் தியற்றிய கவின் பெறு: வனப்பாகக் கொள்ளலாம். பாரத நாட்டைப் பாருக்குள்ளே நல்ல நாடு என்று

31. பா.ச. : 17 116 * இப்பூவுலகில் அன்னம் என்ற பறவையைக்  : “+

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/92&oldid=681327" இலிருந்து மீள்விக்கப்பட்டது