பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் பாரதி 버 சீனிவாசன் 'சந்திரன் சோதி யுடையதாம் - அது சத்திய நித்திய வஸ்து வாம் - அதைச் சிந்திக்கும் போதினில் வந்து தான் - நினைச் சேர்ந்து தழுவியருள் செயும் - அதன் மந்திரத்தால் இவ்வுலகெலாம் - வந்த மாயக் களிப் பெருங் கூத்துக் காண் - இதைச் சந்ததம் பொய்யென்று உரைத்திடும் - மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா!' என்று கூறுகிறார். "ஆதித் தனிப் பொருள் ஆகுமோர் - கடல் ஆரும் குமிழி உயிர்களாம் - அந்தச் சோதி அறிவென்னும் ஞாயிறு-தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்- அதன் மீதிப் பொருள்கள் எவையுமே வண்ணங்கள் - வண்ண நீதியறிந்தின்ப மெய்தியே - ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார்" என்று பாடுகிறார். "சோதியறிவினில் விளங்கவும் - உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற நீதி முறை வழுவாமலே - எந்த நேரமும் பூமித் தொழில் செய்து கலை ஓதிப் பொருளியல் கண்டு தாம் - பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே - இன்ப மோது வழிக்கும் விழியினர் - பெண்மை மோகத்தில் செல்வதில் கீர்த்தியில்" என்றும், "ஆடுதல், பாடுதல் சித்திரம் - கவி யாதி இணைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்று நடப்பவர்- பிறர் 1H ஈனர் நிலை கண்டு துள்ளுவார் - அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும்-சில நாளில் எய்தப் பெறுகுவர் - அவர் காடு புதரினில் வளரினும் - தெய்வக் காவன மென்றதைப் போற்றலாம்" என்றும், "ஞானியர் தம்மியல் கூறினேன்- அந்த ஞானம் விரைவினில் எந்து வாய் - எனத் தேனிலின் இனிய குரலிலே-கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் - பண்டை ஈன மனிதக் கனவெல்லாம் - எங்ங்கன் ஏகி மறைந்தது கண்டிலேன் - அறி வான தனிச் சுடர் நான் கண்டேன்- அதன் ஆடல் உலகென நான் கண்டேன்" என்றும் துள்ளிக் குதித்துப் பாடலை முடிக்கிறார். அறிவில் ஒளி வீச வேண்டும். மதியில் நுட்பம் விளங்க வேண்டும் அறநெறி வழியில் நீதிமுறை வழுவாமல் பூமியில் தொழில்கள் செய்ய வேண்டும். மிகவும் சிறப்பாகப் பொருளியல் கண்டு தெளிய வேண்டும். மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தீர வேண்டும். இன்ப நிலை, இனிய குடும்ப நிலை, செல்வம், கீர்த்தி, ஆடுதல், பாடுதல், சித்திரம், கவி முதலிய அனைத்துக் கலைகளிலும் மக்களின் உள்ளம் ஈடுபட்டுச் சமுதாய நிலை உயர வேண்டும். ஈன நிலை எவருக்கும் ஏற்படக் கூடாது. அனைவருக்கும் அவர் நாடும் நல்லன அனைத்தும் கிடைக்க வேண்டும். இந்த ஞானம் அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்று கண்ணன் சற்குரு வடிவில் நின்று பாரதப் பண்பாட்டின் திசை வழியில் பாரதியிடன் போதனை செய்வதாகக் கூறும் இந்தக் கருத்துக்களே பாரதியின் சமுதாய நெறிக் கருத்துக்களாகும் இந்த போதனைகளில் பாரதி அறிவுச் சுடரையும் அச்சுடரில் அசைந்தாடும் முழு உலகையும் உலகப் பெரு வடிவையும் காண்கிறார். அடுத்தபடியாக, கண்ணனைக் குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, கண்ணம்மாவைக் காதலியாக பாவித்து பாரதி பாடியுள்ள கவிதைகள் அதி அற்புதமான அன்பைக் காதலை, இனிய குடும்பச் சூழலை இயற்கையுடன் இணைத்துக் கவிதை வடிவில் வடித்து எடுத்திருப்பது தேனும் பாலும் கலந்த இனிப்பாகும். சத்தும் சுவையும்