பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் நலமோ ரெட்டுணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்" என்று சத்தியப் பிரமாணம் செய்து பாரதியார் இக் கவிதைகளைச் சிறப்புறப் பாடி முடித்துள்ளார். ஆங்கிலக் கல்வி பற்றிய பாரதியின் கருத்துகளும், அவைகளின் பொருத்தங்களும் இன்றும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கன. ஆய்வு செய்யத்தக்கன. செயல்படுத்தவும் தக்கன. இன்றைய இந்திய உயர்கல்வியின் இயற்பியல், வேதியல், வானவியல், தாவிரவியல், உயிரியல்,பொறியியல், நீரியல், கடலியியல், செய்தித்தொடர்பு, வைத்தியம், மருந்தியல், கணிதம் முதலிய இதர இயற்கை அறிவியல்துறைகள் மற்றும் இலக்கியம் மொழி இலக்கணம், பொருளியல், வணிகவியல், சட்ட பொருளியல், வாணிபம், தத்துவ ஞானம், கட்டிடவியல், சிற்பம் முதலிய பல்வேறு சமூக அறிவியல் துறைகளும் இந்திய மண்ணில் வேர் விட்டுத் தொடங்கி இந்திய வரலாற்று அனுபவத்தில் இணைந்து உருப்பெற்றுவளர்ச்சி பெற்று. உலக அறிவையும்சேகரித்து இணைத்துக்கொண்டுபுதிய அறிவியல் சாதனைகளையும் சேர்த்துக் கொண்டு நமது நாட்டின் தற்கால எதிர்கால தேவைகளை முழுமைப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைவதே சீரான கல்வியாகும் என்பதை பாரதியின் சிந்தனையும் அவர் வெளியிட்டுள்ள கருத்துகளும் எடுத்துக் காட்டுகின்றன. வலியுறுத்திக் கூறுகின்றன. பல துறைகளிலும் பாரத நாட்டில் அறிவுத் துறையை வளர்த்து அதன் உச்சிக்குச் சென்றுள்ள பல அறிஞர்கள், பேரறிஞர்கள். தனிச்சிறப்பு மிக்க ஞானிகள். மேலோர்கள், வீரர்கள், செங்கோல் மன்னர்கள், மேதைகள் முதலியவர்களைக் குறிப்பிட்டு அவர்களின் அறிவுத்துறை சாதனைகளை நாட்டின் பொது அறிவுத் துறையின் வளர்ச்சிக்கு வளப்படுத்திப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாரதியின் கவிதைகளும், கவிதைக் கருத்துக்களும் தெளிவுப் படக் கூறுவதை காணலாம். அந்தப் பண்பாட்டின் பாரம்பரியத்தில் பாரதி தன்னைத் தெளிவாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதி தனது சுயசரிதைத் தொகுப்பைத் தொடங்கும் போது பட்டினத்துப் பிள்ளையின் பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே என்னும் தத்துவ ஞான வாசகத்துடன் தொடங்குகிறார். பாரதி அறுபத்தாறு என்னும் கவிதைத் தொகுப்பைத் தொடங்கும் போது, "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" HH என்று தொடங்குகிறார். சிவாஜியும் குரு கோவிந்தரும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் வந்த மாவீரர்களையும், சிறந்த சிந்தனையாளர்களையும், அறிவுத் துறைச் செல்வர்களையும் பற்றிப் பாடும் பாரதி, மராட்டிய வீரன் சிவாஜி தனது போர்ப் படையினருக்கு விடுத்த வேண்டுகோளைப் பற்றியும், குரு கோவிந்த சிம்மர், தனது சீடர்களுக்கு விடுத்த அறிவுரைகளையும் பற்றித் தனது பாடல்களில் தனித்தனிக் கவிதைகளாகத் தொகுத்துப் பாடியுள்ளார். டில்லி மாநகரைத் தலைமையாகக் கொண்டு இந்திய நாட்டை ஆங்கிலேயர்களுக்கு முன் ஆண்ட மொகலாயப் பேரரசின் பலம் வாய்ந்தக் கடைசிப் பேரரசனாக, கொடுங்கோலனாக சக்கரவர்த்தியாக ஒளரங்கசீப் கருதப்படுகிறான். ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் மொகலாய மன்னராட்சி முறை கொடுங்கோன்மையின் உச்சி நிலையில் இருந்தது எனக் கூறலாம். ஒளரங்க சீப்பின் ஆட்சிக் காலத்தில் டில்லி சாம்ராஜ்ய ஆதிக்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் மன்னராட்சி முறைக் கொடுமைகளுக்கெதிராக மக்களுடைய கலவரங்களும் எழுந்தன. இவைகளில் முக்கியமானது தெற்கில் மராட்டியருடைய எழுச்சியும் மேற்கில் பாஞ்சாலத்தில் சீக்கியர்களுடைய பேரெழுச்சியுமாகும். இவ்விரண்டையும் எடுத்துக் காட்டும் முறையில் பாரதி முறையே சிவாஜியைப் பற்றியும், கோவிந்தரைப்பற்றியும் தனது சிறப்புமிக்க தனிக் கவிதைகளில் பேசுகிறார். சத்திரபதி சிவாஜி தனது படை வீரர்களிடம் பேசுவதை பாரதி குறிப்பிடுகிறார். "சேனைத் தலைவர்காள் சிறந்த மந்திரிகாள், யானைத் தலைவரும் அரும் திரல் வீரர் காள், அதிரத மன்னர்காள்துரக்கத்ததிபர்காள் எதிரிகள் துணிக்குற இடித்திடு பாதாதி காள் வேலெறி படைகாள், சூலெறி மறவர்காள் காலன் உருக்கொளும் கனை துரந்திடுவீர் மற்றும் ஆயிரம் விதம் பற்றலர் தம்மைச் செற்றடுந்திறுனுடையத் தீரரத்தினங்காள் யாவிரும் வாழியே, யாவிரும் வாழியே" என்று அனைவரையும் அழைத்து முதலில் தாய் நாட்டின் பெருமையைப்