பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 97 " மேலும் தமிழ் என்னும் தலைப்பிலான கவிதைகளில், பாரதி, தமிழ் மொழியின் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துக்கூறி அந்தப் பாரம்பரியத்தில் அடுத்துவரும் காலத்தில் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி ஒரு விரிந்த செயல்திட்டத்தையே பாரதி நம்முன்வைக்கிறார். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" எனவே, "தேமதுரத்தமிழோசை உலகெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்" என்று கட்டளையிடுகிறார். "யாமறிந்த புலவரிலேகம்பனைப்போல் வள்ளுவர்போல, இளங்கோவைப் போல பூமிதனில் யாங்கணுமே பிறந்த தில்லை உண்மைவெறும் புகழ்ச்சியில்லை என்று பெருமையுடன் பேசும் பாரதி "ஊமையராய்ச்செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற்கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று கட்டளையிடுகிறார். அத்துடன் தமிழ் வளர்ச்சிக்கு பாரதியின் செயல்திட்டம் "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்"