பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 99 "நரியுயிர்ச்சிறு சேவகர்தாதர்கள் நாயெனத்திரியொற்றர் உணவினைப் பெரிதெனக் கொடுதம்முயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கிச்சகம் பேசுவோர் கருதுமிவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலைபயில் கென என்னை விடுத்தனன் அருமைமிக்க மயிலைப் பிரிந்து மிவ் வற்பர்கல்வியில் என் நெஞ்சு பொருந்துமோ" என்று ஆங்கிலேயர் காலத்துக் கல்வி முறையைப் பற்றி பாரதி கூறுகிறார். இந்திய மக்களை அடக்கி ஒடுக்கித் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இந்தியாவில் தங்களுடைய நிர்வாக முறையை நிறுவினார்கள். அந்த நிர்வாக முறை அடிப்படை நோக்கமாக இருந்தது இந்த நாட்டில் ஆங்கில ஆட்சியி ன் நலன்களைப் பாதுகாப்பதும், அதற்காக இந்திய மக்களைத் தங்களது ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுமேயாகும். அத்தகைய நிர்வாக அமைப்பிற்கு அவசியமான அதிகாரிகளை அலுவலர்களை, மற்றும் தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்கான வகையில் ஆங்கிலேயர் ஆட்சி காலக்கல்விமுறை உருவாயிற்று. இந்த நாட்டின் மக்களின் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஞானத்தை, அறிவைப்பெறுவதற்கான கல்வியாக அது இருக்க வில்லை. அதைப் பற்றி பாரதி மேலும் கூறுகிறார். "கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள்வானிலோர் மீன்நிலை தேர்ந்திலர் அணி செய்காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார், வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டின் பொருள்கெடல் கேட்டிலார் துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எட்டுனைப்பயனும் கண்டிலார், என்று கூறுகிறார். மேலும் "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர்வானத்து கோளையும் மீனையும் ஒர்ந்து அளந்த தோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பருந்திறலோடு ஒரு பாணினி