பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 3 "பூரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம்காட்டி ஆத்துமநிலை விளக்கிய தொப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில் இச்சிறுநூலைச் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறுகிறார். பாரதி பாரத நாட்டின் விடுதலையைப் பற்றிப் பேசும்போது அன்னிய ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை என்பதைப்பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. பாரத நாட்டின் வரலாற்றுப்பெருமையைக் கண்டான். இன்றயதுக்கங்களைக் கண்டான். நாட்டின் ஒளி மிக்க எதிர்காலத்தையும் கண்டான். அதையே பாரத அன்னையின் முழுமையான வடிவத்தைக் காண்பதாகக் கூறுகிறான். "முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்" அடுத்த வரியாக "முண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும்" என்று குறிப்பிடுகிறார். __ பாரதி கண்டது ஒரு புதிய மார்க்கமாகும். "சூரியன் உதித்தவுடனே, சேதனப்பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப்பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத்திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே நாட்டில் ஒர் புதிய ஆதர்சம், ஓர் தர்மம், ஓர் மார்க்கம் தோன்றுமேயானால் மேன் மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரிய காந்த மலர் போல அவ்வாதர்சத்தை நோக்கித்திரும்புகின்றன" என்றும் அதைப்போல சர்வசுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேசபக்தி' என்னும் நவீன மார்க்கம் தோன்றியுள்ளது என்றும் பாரதி கூறுகிறார். பாரதியின் தேசபக்தி அனைத்தாள விய தன்மை கொண்டதாகும். நெஞ் சில் உரமும் நேர்மைத்திறமும் கொண்டதாகும். அச்சத்தையும் பேடிமையையும் அடிமைச்சிறு மதியையும் தூக்கித்துர எரிவதாகும். ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் கொண்டதாகும். கலியின்வலுவினை வீழ்த்தி கிருதயுகத்தினைக்கேடின்றி நிறுத்துவதற்கான புதிய மார்க்கமாகும். எனவே, நமது அறிவுக்கண்களைத்திறந்து பாரதியின் கவியுள்ளத்தை உணர்ந்து , அ வ ரு ைடய கவிதை க ளி ன் வி. ஸ் வ ரூ பத் தை உலகப்பெருவடிவத்தைக் காண வேண்டும். அதற்கான வகையில் சிறு துரும்பான முயற்சியாக இந்நூலின் அடுத்து வரும் கட்டுரைக்கருத்துக்களைக் காணவேண்டும். பாரதியின் பன்முகவடிவத்தைக்கான முயலும் பல்வேறு துறை அறிஞர்களையும் பேண வேண்டும்.